நடிகர் விஜய்யின் இடத்தை காலி செய்த நடிகர் சிவகார்த்திகேயன் கோட் திரைப்படத்தை முந்திய ‘அமரன்’!

நடிகர் விஜய்யின் இடத்தை காலி செய்த நடிகர் சிவகார்த்திகேயன் கோட் திரைப்படத்தை முந்திய ‘அமரன்’!

சென்னை 06 நவம்பர் 2024 நடிகர் சிவகார்த்திகயேன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அமரன்.

இந்த அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து உலகநாயகன் நடிகர் கமலஹாசன் மற்றும் ஆர் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

2014 ஆம் ஆண்டு வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் என்றாலும், அதற்கேற்றால் போல நடிகர் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்திருக்கிறார்.

அமரன் திரைப்படம் வெளியான நாள் முதல் வசூல் நிதியாகவும் நல்ல விமர்சனங்களும் பத்திரிகையாளர்கள் பாராட்டுகளை தொடர்ந்து தமிழ் திரைப்பட ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

‘ரங்கூன்’ திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

திரைப்படம், பாடல், நடிப்பு என எல்லாவற்றிலுமே ‘அமரன்’ பாஸ் மார்க்கை தாண்டி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களை விட இந்த ‘அமரன்’ திரைப்படம் உச்சக்கட்ட வசூலையும் வெற்றியையும் குவித்து வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தனது துப்பாக்கியை நடிகர் சிவகார்த்திகேயனிடம் கொடுத்ததும், நடிகர் சிவகார்த்திகேயன் சுட்டு தள்ளிவிட்டார் என சிவகார்த்திகேயன் கோடான கோடி ரசிகர்கள் மார்பட்டி கொள்கிறார்கள்.

ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ‘அமரன்’ திரைப்படம் வசூல் நிதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

இதுவரை ‘கோட்’ திரைப்படம் அங்கு 18 கோடி மட்டுமே வசூல் செய்த நிலையில், ‘அமரன்’ திரைப்படம் இதுவரை 19 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படத்தை விட சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘அமரன்’ திரைப்படம் முந்தியதாகவும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.

அடுத்தது ‘விஜய்’ முதல் இடத்தில் சிவகார்த்திகேயன் தான் வருவார் என அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் தனது தலைவனை கொண்டாடி வருகிறார்கள்.