வேறு வழியின்றி ஓ.டி.டி.க்கு செல்லும் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படம்?

சென்னை 31 மே 2021

வேறு வழியின்றி ஓ.டி.டி.க்கு செல்லும் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படம்?

கொரோனா வைரஸ் நோய் தொற்று ரஅச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு வருடமாக வெளிவராமல் இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த திரைப்படம் தற்போது OTT -யில் வெளியாக உள்ளதாம்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பது மட்டுமின்றி, திரைப்படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.

இவர் இதுவரை இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

அதில் இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து நடிகர் ரியோ நடிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தை தயாரித்திருந்தார். 

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள மூன்றாவது திரைப்படம் ‘வாழ்’. இந்த திரைப்படத்தை அருவி திரைப்பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார்.

கடந்த 2019-ம் வருடமே எடுத்து முடிக்கப்பட்ட இந்த திரைப்படம், தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இருப்பினும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திரைப்படத்தின் வெளியீட்டு தள்ளிப்போனது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தை நேரடியாக OTT-யில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

‘வாழ்’ திரைப்படத்தின் OTT உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.