Thursday, July 29
Shadow

குறைந்த செலவில் எடுத்த திரைப்படங்களுக்கு மானியம் – தமிழக அரசு

குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் குறைந்த செலவில் உருவாகி வெளியான திரைப்படங்கள் குறித்த தகவலை நவம்பர் 29ஆம் தேதிக்குள் ரூ.100 வரவோலை எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழக அரசு, தேர்ந்தெடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரு.7 லட்சம் மானியம் வழங்கப்படும் எனவும் அதில் அறிவித்துள்ளது.