கேரளாவிடம் கற்றுக் கொல்லுங்க கொரோனா வைரஸ் நோய்யை பிரபல தயாரிப்பாளர் SR பிரபு.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க நமது மத்திய அரசும் மாநில அரசும் பலவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இந்தியாவில் முதல் முதலில் கொரோனா வைரஸ் நோய் தொற்று கேரளாவில் தான் கண்டறியப்பட்டது.

அதற்கு முக்கிய காரணம் மலையாளிகளில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் தான் வசிக்கிறார்கள்.

அவர்கள் சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியபோது கொரோனா வைரஸ் நோய் தொற்றி அதிகளவில் பரவியது.

ஆனால் கேரளத்து முதல்வர் பினராயி விஜயன் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு விழிப்புணர்வு மற்றும் உலக சுகாதார துறையினர் பரிந்துரை செய்த வழிகாட்டுதலின்படி கேரளா அரசு நடவடிக்கைகளை சரியான தருணத்தில் எடுத்து வருகின்றனர்.

கேரள அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு மலையாளிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் முதல் இடத்தில் இருந்த கேரளா, தற்போது பின்னுக்கு சென்றுவிட்டது.

இப்போதும் சிலர் பாதிப்புக்குள்ளாகியிருந்தாலும் அந்த நிலை உடனே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜோக்கர், அருவி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் S.R பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாநிலங்களும் கேரளாவை பின்பற்றி தங்கள் மாநிலங்களில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்