கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கு நிவாரண நிதிக்காக ரூபாய் 3 கோடியை வாரி வழங்கிய இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் ராகவா லாரன்ஸ்.!
சினிமாவில் மட்டும் சிலர் ஹீரோவாக வாழும் தருணத்தில் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வருபவர் இயக்குனர் நடன இயக்குனர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இவர் எண்ணற்ற அனாதை குழந்தைகளை தத்தெடுத்து தனது அறக்கட்டளை சார்பில் வளர்த்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி பல வகையான சேவைகளை செய்து வருகிறார்.
பார்வையற்ற மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகம் உதவி செய்துவருகிறார் அவர்களின் சிகிச்சைக்கும் பல லட்சங்களை செலவு செய்து வருகிறார்.
மேலும் ஏழைகளுக்கு வீடு கட்டவும் அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை தடுக்க நிவாரண நிதியாக தொகையாக ரூபாய் மூன்று கோடி தருவதாக அறிவித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
பிரதமரின் PM CARES கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார்.
முதலமைச்சர் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்.
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு ( பெப்சி ) 50 லட்சம் ரூபாய் உதவியிருக்கிறார்.
நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு 50 லட்சம் ரூபாய் உதவியிருக்கிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.
ராயபுரம் பகுதியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு 75 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.
என மொத்தமாக ரூபாய் மூன்று கோடியை கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2005ம் வருடம் வெளி வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ,ஜோதிகா ,லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ,வைகைப்புயல் வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் கதையின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் பி.வாசு முன்பே தயார் செய்து வைத்திருந்தார்.
இந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
இந்த சந்திரமுகி 2 திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிக்கிறார்.
இத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசியுடன் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளதை அறிவித்துள்ளார்.
இந்த 3 கோடி ரூபாய் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை எனவும் கூறப்படுகிறது.