கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்த பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 கோடியை வழங்கியிருக்கிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தனது தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.
இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது.
இந்த கரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிறப்பித்துள்ளார்.
தற்போது 4 நாள் கடந்து உள்ளோம்.
ஊரடங்கு உத்தரவால் நம் நாட்டு மக்களின் இயல்பு நிலையான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாபெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்ட நிலையில் மத்திய மாநில அரசுகள் நிவாரண நிதி மக்களிடம் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 2.0 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த அக்ஷய் குமார் அவர்கள் நமது பிரதமர் நரேந்திர மோடியின் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 கோடி நிதி வழங்கி உள்ளார்.
இதுவரை நிவாரண நிதி அளித்த நடிகர்களில் இவர்தான் அதிகமான தொகையை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.