Monday, May 25
Shadow

சின்ன திரை கலைஞர்கள் குடும்பத்தினருக்கு ரஜினியின் கொரோனா நிவாரணம் வழங்கினார்

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு தாக்குதலால் உலகமே ஸ்தம்பித்துள்ளது.

மக்களின் நெருக்கத்தை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் இந்திய மக்கள் கடந்த ஒரு மாதமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருகிறார்கள்.

இதனால் தின வருமானத்தை நம்பியுய்ய ஏழைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை போல சினிமாவை நம்பி வாழும் பல தொழிலாளிகளும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இவர்களுக்கு பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து நிறைய உதவிகளை செய்து வருகின்றனர்.

இயக்குனர் நடன இயக்குனர் நடிகர் ராகவா லாரன்ஸ் தினம் தினம் ஒரு அறிவிப்பாக பல லட்சங்களை நிவாரண நிதியாக கொடுத்து வருகிறார்.

தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் அம்மா உணவகத்துக்கு நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சத்தை வாரி வழங்கி இருக்கிறார்.

திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான FEFSIகக்கு சில வாரங்களுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் உள்ள உதவி இயக்குனர்கள், நலிந்த கலைஞர்கள் என 1500 பேரின் குடும்பத்தினருக்கு (24 டன் அத்தியாவசிய) அரிசி மற்றும் மளிகை பொருட்களை நிவாரணமாக கொடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களும் தமிழ்நாடு முழுவதும் தங்களால் இயன்ற வகையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.