சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பை நடிகை நயன்தாரா புறக்கணித்ததாக தகவல்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்து டப்பிங் உள்ளிட்ட வேலைகளை தொடங்க இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை நயன்தாரா, தனக்கு பேசப்பட்ட சம்பளம் முழுமையாக தரப்படாததால் கடைசி நாள் படப்பிடிப்பை புறக்கணித்ததாக கூறப்பட்டது. பொதுவாக படத்தில் நடிப்பவர்களுக்கு ஒப்பந்தமாகும் போது குறிப்பிட்ட தொகையையும், மீத தொகையை டப்பிங் சமயத்திலும் வழங்குவார்கள். ஆனால், நடிகை நயன்தாராவிற்கு வேறு ஒருவர் டப்பிங் செய்வதால் கடைசி நாள் படப்பிடிப்பின் போது முழு சம்பளத்தையும் நடிகை நயன்தாரா பெறுவது வழக்கம் என்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர் இயக்குனர் முருகதாஸ் மீதி சம்பளத்துக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறிய பின்னரே, இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.