சொந்த ஊர் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய நடிகர் நந்தா

நடிகர் நந்தா, சொந்த ஊர் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கி உதவியுள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்காக நடிகர், நடிகைகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

நடிகர் நந்தா, கோவை அருகே உள்ள தனது சொந்த ஊரான சென்றம்பாளையம் கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார். நந்தாவின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு அந்த கிராமத்து மக்கள் நன்றி கூறியுள்ளனர்.