ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3./ 5.
நடிகர் & நடிகைகள் :- ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, நவீன் சந்திரா, சத்யன், சஞ்சனா நடராஜன், ஷைன் டாம் சாகோ, அரவிந்த் ஆகாஷ், அஷ்ரப் மல்லிசேரி, வித்து, கபில வேணு, தமிழ், தேனி முருகன், பாவா செல்லதுரை, ஷீலா ராஜ்குமார், விஷ்ணு கோவிந்த், ஆதித்யா பாஸ்கர், சுஜாதா, ரவி மாஸ்டர், மனோஜ், ரத்தினம், முத்துப்பாண்டி, ஸ்ரீனி, பழனி, ஜெய்குமார், அசோக் நவீன், யமுனா, ராதாகிருஷ்ணன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கார்த்திக் சுப்புராஜ்.
ஒளிப்பதிவாளர் :- எஸ் திருநாவுக்கரசு.
படத்தொகுப்பாளர்:- ஷபீக் முகமது அலி.
இசையமைப்பாளர் :- சந்தோஷ் நாராயணன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- எஸ். கதிரேசன், கார்த்திகேயன் சந்தானம்,
ரேட்டிங் :- 3./ 5.
மதுரை மாநகரத்தில் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் மிகப்பெரிய தாதாவாக வலம் வருகிறார்.
திரைப்படங்களில் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க அப்போது ஆல்ரெடி திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் ஒருவர் நீ கதாநாயகனாக நடிப்பதற்கு நீங்கள் கருப்பாக இருக்கிறீர்கள் திரைப்படத்தில் எப்படி கதாநாயகனாக நடிக்க முடியும் என கேட்கிறார்.
இதனால் நான் கண்டிப்பாக கதாநாயகன் நடித்தாக வேண்டும் என்று கதாநாயகன் ராகவா லாரன்ஸ் ஒரு முடிவோடு இருக்கிறார்.
அவர் கதாநாயகனம் முடிப்பதற்கு ஒரு நல்ல இயக்குனரை ஒருவரை தேடிக் வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் காவல்துறை சப் இன்ஸ்பெக்டருக்கு தேர்வாகி கொலை பலியால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிடம் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று காவல்துறை அதிகாரி கதாநாயகன் ராகவா லாரன்ஸ் நீ கொன்று விட்டால் உனக்கு விடுதலையும் கிடைத்து விடும் நீயும் காவல்துறை சப் இன்ஸ்பெக்டராக பணி சேரலாம் என வந்த காவல்துறை அதிகாரி கூறுகிறார்.
காவல்துறை அதிகாரி கூறும் விஷயத்திற்கு ஒப்புக்கொண்டு எஸ்.ஜே.சூர்யாவும் அதை மதுரை செல்கிறார்.
கதாநாயகன் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிப்பதற்காக நல்ல கதை வைத்திருக்கும் புது இயக்குனரை தேடிக் கொண்டிருக்கிறார் என விளம்பரம் விளம்பரத்தை பார்க்க எஸ்.ஜே.சூர்யா ஒரு இயக்குனராகம் கதாநாயகன் ராகவா லாரன்ஸை சந்திக்கிறார்
கதாநாயகன் ராகவா லாரன்ஸ் உன்னை கதாநாயகனாக வைத்து உனது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கிறேன் என்று கூறி கதாநாயகன் ராகவா லாரன்ஸ் உடன் பயணிக்கிறார்.
திரைப்படம் எடுக்கும் சாக்கில் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் கொலை செய்ய திட்டம் திட்டுகிறார்.
இந்த நிலையில் கதாநாயகன் ராகவா லாரன்சை எஸ்.ஜே.சூர்யா கொன்றாரா? கொள்ளவில்லையா? எஸ்.ஜே.சூர்யாவின் திட்டம் கதாநாயகன் ராகவா லாரன்ஸுக்கு தெரிந்ததா? தெரியவில்லையா? ராகவா லாரன்ஸை வைத்து எஸ்.ஜே.சூர்யா திரைப்படம் எடுத்தாரா? எடுக்கவில்லையா? என்பதுதான் இந்த ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார்.
இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ், தனக்கே பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார்.
அவரது தோற்றம், மற்றும் ஒப்பனை நடை, உடை, உடல் மொழி அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வகையில் இருக்கிறது.
ஆக்ஷன் காட்சிகளில் அருமையாக மிரட்டி இருக்கிறார்.
இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் மற்றொரு கதையின் நாயகனாக நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார்கள்.
மற்றொரு கதையின் நாயகனாக வரும் எஸ்.ஜே.சூர்யா போட்டி போட்டு நடிப்பை அசுரத்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றொரு கதையின் நாயகனாகிய எஸ் ஜே சூர்யா தொடை நடுங்கியாகவும் திரைப்படம் எடுக்கும் இயக்குனராகவும் நடிப்பின் மூலம் கவனிக்க வைத்து இருக்கிறார்.
குறிப்பாக கதையின் நாயகன் ராகவா லாரன்ஸ் காப்பாற்றும் காட்சியில் எஸ் ஜே சூர்யா நெகிழ வைத்து விட்டார்.
கதையின் நாயகன் ரகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவும் கிளைமேக்ஸ் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார்கள்.
கதையின் நாயகன் ராகவா லாரன்ஸ் ஜோடியாக வரும் நிஷா விஜயன் நடிப்பின் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் பதிந்து விட்டார்.
காவல்துறை அதிகாரியாக வரும் நவீன் சந்திரா மிகவும் கொடூரமான வில்லனாக நடிப்பின் மூலம் பதிய வைத்திருக்கிறார்.
அமைச்சராக வரும் இளவரசு அவருடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா வின் தோழனாக வரும் சத்தியன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நினைத்திருக்கும் ஷைன் டாம் சாகோ, அரவிந்த் ஆகாஷ், அஷ்ரப் மல்லிசேரி, வித்து, கபில வேணு, தமிழ், தேனி முருகன், பாவா செல்லதுரை, ஷீலா ராஜ்குமார், விஷ்ணு கோவிந்த், ஆதித்யா பாஸ்கர், சுஜாதா, ரவி மாஸ்டர், மனோஜ், ரத்தினம், முத்துப்பாண்டி, ஸ்ரீனி, பழனி, ஜெய்குமார், அசோக் நவீன், யமுனா, ராதாகிருஷ்ணன், அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு நகரத்தையும், காட்டையும் மிக அழகாக திரைப்படமாக்கி அருமையாக காண்பித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஷபிக் முகமது அலி படத்தொகுப்பு திரைப்படத்திற்கு ரசிக்கும் படி அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் பாடல்கள பிண்ணனி இசை திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
பல காட்சிகளுக்கு இவருடைய இசை மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த வெற்றி பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனற இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
1975 வருடம் காலகட்டத்திற்கு நடக்கும் வகையில் திரைப்படத்தை இயக்கி இருப்பது மிகவும் சிறப்பு.
முதல் பாதி நகரத்தின் ரவுடி வாழ்க்கையையும், இரண்டாம் பாதியில் காடு, காட்டுவாசிகளின் வாழ்க்கையையும் திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
கேங்ஸ்டர் கதையில் காட்டை அழிக்கும் அரசியலை சொல்லி இருப்பது மிக மிக சிறப்பு. யானை வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.
கிளைமேக்ஸ் காட்சி மூலம் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெறுகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
மதுரை என்றால் மல்லியும் ஜிகிர்தண்டாவும் தான் பேமஸ் என கூறுவார்கள் ஆனால் நமது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தாதாக்கள் ரவுடிகள் என சொல்லி இருக்கிறார்.
மொத்தத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் சுவை அதிகம் கண்டிப்பாக திரையரங்கில் குடும்பத்துடன் விசிட் அடிக்கலாம்.