டீமன் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.75./5.
நடிகர் & நடிகைகள் :- சச்சின், அபர்நதி, கும்கி அஸ்வின், சுருதி பெரியசாமி, KPY பிரபாகரன், ரவீனா தாஹா, நவ்யா சுஜி, தரணி, அபிஷேக், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ரமேஷ் பழனிவேல்.
ஒளிப்பதிவு :- R.S.ஆனந்தகுமார் MFI.
படத்தொகுப்பு :- எம்.ரவிக்குமார்.
இசையமைப்பாளர் :- ரோனி ரபேல்.
தயாரிப்பு நிறுவனம் :- விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- ஆர் சோமசுந்தரம்.
ரேட்டிங் :- 2.75./ 5.
கதாநாயகன் சச்சின் திரைப்பட உலகில் மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு உதவி இயக்குனராக இருந்து போராடி கொண்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
ஒரு வழியாக தயாரிப்பாளரிடம் தன் கதையை சொல்லி தயாரிப்பாளருக்கு கதை பிடித்து போகவே இதை உடனடியாக திரைப்படமாக உருவாக்கலாம் எனக் கூற கதாநாயகன் சச்சினுக்கு இயக்குனராகும் வாய்ப்பை கிடைக்கிறது.
கதை விவாதம் தனது திரைப்படத்திற்க்கான அனைத்து பணிகளை செய்வதற்கு வசதியாக கதாநாயகன் சச்சின் ஒரு தனி பிளாட் ஒன்றை எடுத்து தங்குகிறார்.
அந்த பிளாட்டிற்கு குடிவந்த பிறகு ஒருநாள் இரவில் தனியாக இருக்கும் போது அமானுஷ்யமான சக்திகள் கதாநாயகன் சச்சினுக்கு கனவுகள் வருகின்றன.
எல்லாமே கதாநாயகன் சச்சினின் உயிரைப் பறிக்கும் விதமான கனவுகளாக உள்ளன.
ஒரு கட்டத்தில் கதாநாயகன் சச்சினுக்கு கனவுகள் அனைத்தும் நிஜமாக மாறுகிறது.
இறுதியில் இந்த கனவு பிரச்சனையில் இருந்து கதாநாயகன் சச்சின் மீண்டாரா? மீளவில்லையா? கதாநாயகன் சச்சினுக்கு தொடர்ந்து பயமுறுத்தும் அமானுஷ்ய சக்திகள் யார்? என்பதுதான் இந்த டீமன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த டீமன் திரைப்படத்தில் சச்சின் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் சச்சின் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் சச்சின் அவருடைய தோற்றத்தில் உடல் மொழியில் கதாபாத்திரத்திற்கும் மிகவும் அருமையாக பொருத்தமாக இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் கதாநாயகன் சச்சின் தனி ஆளாக நின்று முழு திரைப்படத்தையும் ஆக்கிரமித்து இருக்கிறார்.
இந்த டீமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக கார்த்திகா பாத்திரத்தில் வரும் கதாநாயகி அபர்ணதி சில காட்சிகள் மட்டுமே வருகிறார்.
கதாநாயகி அபர்ணதி மிகவும் அழகாக வந்து அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகி அபர்ணதியை அவரை மேலும் பயன்படுத்தி இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
கதாநாயகன் சச்சினுக்கு நண்பராக வரும் கும்கி அஸ்வின் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்.
திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்த குமாரின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
நான்கு சுவர்களுக்குள் நடக்கும் கதை மற்றும் திரைக்கதையாக இருந்தாலும் எந்த விதத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்த குமார் மிகப்பெரிய அளவில்
தாங்கி பிடித்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் ரோனி ரபேல். இசை மற்றும் பின்னணி இசை அனைத்தும் திரைப்படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
ஹாரர் திரைப்படத்திற்கு படத்தொகுப்பு மிக முக்கியம் படத் தொகுப்பாளர் எம்.ரவிக்குமார் படத்தொகுப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
திரைப்படம் தொடக்கத்திலிருந்து இது ஒரு பேய்ப் திரைப்படம் என காட்சிகள் வருகின்றன.
ஆனால் போகப் போக உளவியல் சார்ந்த மனப் பாதிப்பு கொண்ட ஒரு கதாபாத்திரத்தையும் ஆவி சம்பந்தப்பட்ட கற்பனையையும் ஒன்றிணைத்துள்ளார் இயக்குனர் ரமேஷ் பழனிவேல்.
ஆவி மற்றும் அமானுஷ்ய சக்திகள் என திகில் கதையை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் பழனிவேல்.
மொத்தத்தில் டீமன் திரைப்படம் மிகச் சிறப்பு.











