துடிக்கும் கரங்கள் திரைவிமர்சனம் ரேட்டிங்:-2.75/5.

நடிகர் & நடிகைகள் :- விமல், மிஷா நரங், சதீஷ், சௌந்தர்ராஜா, சுரேஷ் மேனன், சாங்கிலி முருகன், பில்லிமுரளி, ஆனந்த் நாக், சுபிக்ஷ், ஆர்யா, ரூபினா ரூபிஷா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வேலுதாஸ்.

ஒளிப்பதிவு :- ரம்மி.

படத்தொகுப்பு :- சந்திரகுமார் ஜி.

இசையமைப்பாளர் :- ராகவ் பிரசாத்.

தயாரிப்பு நிறுவனம்:- ஓடியன் டாக்கீஸ்.

தயாரிப்பாளர் :- கே. அண்ணாதுரை.

ரேட்டிங் :- 2.75/ 5.

கதாநாயகன் விமல் கொத்து புரோட்டா என்கின்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

பொது மக்களுக்கு எதிராக அநியாயங்களை எது நடந்தாலும் தனது வீடியோவில் பதிவிட்டு தன் கொத்து புரோட்டா சேனல் வழியாக கதாநாயகன் விமல் நியாயம் கேட்டு வருகிறார்.

இந்நிலையில் தன் மகன் அனந்த நாக்கின் தந்தை சங்கிலி முருகன், சென்னைக்கு படிக்க வந்த மகனை தேடி வருகிறார்.

அதே நேரத்தில் காவல்துறை அதிகாரி சுரேஷ் மேனனின் மகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்.

இதில் சங்கிலி முருகன் மகன் அனந்த நாக் தொடர்பு இருப்பதாக காவல்துறை ஆய்வாளர் சவுந்தரராஜா சந்தேகப்படுகிறார்.

இந்த சூழ்நிலையில் சங்கிலி முருகனின் வீடியோவை தன் கொத்து புரோட்டா யூடியூப்பில் பதிவிடுகிறார் கதாநாயகன் விமல்.

இதனால் காவல்துறையின் கவனம் கதாநாயகன் விமல் பக்கம் திரும்புகிறது.

இறுதியில் காவல்துறை அதிகாரி சுரேஷ் மேனன் மகள் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கும் சங்கிலி முருகன் மகனுக்கும் ஆனந்த் நாக் என்ன தொடர்பு? கதாநாயகன் விமல் வெளியிட்ட வீடியோவால் என்ன ஆனது? காவல்துறை அதிகாரி தனது மகளை கொலை செய்தவர்களை கண்டுபிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த துடிக்கும் கரங்கள் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் கதாநாயகனாக விமல் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விமல் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் இருந்து மாறி நகரத்து இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

குறிப்பாக ஆக்ஷனில் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

நேர்மையான காவல்துறை ஆய்வாளராக நடித்து அசத்தி இருக்கிறார் சௌந்தரராஜா.

நேர்மையான காவல்துறை ஆய்வாளராக சௌந்தரராஜா தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

சதீஷின் காமெடி திரைப்படத்தில் பெரிதாக எடுபடவில்லை.

இந்த துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக மிஷா நரங் நடித்திருக்கிறார்.

நாயகி மிஷா நரங் எல்லா திரைப்படங்களிலும் வரும் வழக்கமான கதாநாயகி போல் வந்து சென்றிருக்கிறார்.

சங்கிலி முருகன் அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

காவலராக வரும் ஜெயச்சந்திரன் இடைவேளை வரை தன் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார் பெல்லி முரளி.

ஒளிப்பதிவாளர் ரம்மி ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இசையமைப்பாளர் ராகவ் பிரசாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மீடியாக்களை போல தனி நபர் நடத்தும் யூடியூப்களுக்கும் சமுதாயத்தின் மீது மிகப்பெரிய அக்கறை பொறுப்பு உள்ளது.

எனவே அவர்களும் பொறுப்புடன் நடந்து கொண்டு சமூகத்திற்கு தேவையான நல்லதுகளை செய்யலாம் என சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் வேலுதாஸ்.

பிரியாணி கடைகளில் பழைய சிக்கன் மட்டன் கறிகளைதான் பயன்படுத்துகிறார்கள்.

என கூறிவிட்டு அதை இன்னும் கொஞ்சம் விலாவாரியாக கூறி இருந்தால் இப்படிப்பட்ட பிரியாணி கடைகள் மூடப்பட்டு இருக்கும்.

மொத்தத்தில் துடிக்கும் கரங்கள் திரைப்படம் வீரியம் குறைவு.

error: Content is protected !!