அடியே திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5/5.

நடிகர் & நடிகைகள் :- G V பிரகாஷ் குமார், கௌரி G கிஷன், வெங்கட் பிரபு, RJ விஜய், G K. மதும்கேஷ், சுவேதா வேணுகோபால், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விக்னேஷ் கார்த்திக்.

ஒளிப்பதிவு :- கோகுல் பினாய்.

படத்தொகுப்பு :- –U முத்தயன் DFT.

இசையமைப்பாளர் :- ஜஸ்டின் பிரபாகரன்.

தயாரிப்பு நிறுவனம்:- மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ.

தயாரிப்பாளர் :- பிரபா பிரேம்குமார்.

ரேட்டிங் :- 3.5/ 5.

கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ்குமார் பள்ளி பருவத்தில் ஒரு விபத்தில் தன் தாய் தந்தையை இழந்து, நண்பர்களின் உதவியால் வாழ்ந்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் வாழ பிடிக்காமல் வாழ்க்கையை வெறுத்து வாழவே விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் கதாநாயகன் நாயகன் ஜிவி பிரகாஷ் குமார்.

தனது பள்ளி பருவ காதலி கதாநாயகி கெளரி கிஷனை டிவியில் பேட்டியின் போது பள்ளி பருவத்தில் நடந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வை கதாநாயகி கெளரி கிஷனை சொல்கிறார்.

கதாநாயகி கெளரி கிஷனை பேட்டியை பார்த்த கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் மீண்டும் வாழ வேண்டும் என்ற ஆசையில் கதாநாயகி கெளரி கிஷனை சந்திக்க முயற்சிக்கிறார்.

ஆனால், கதாநாயகி கெளரி கிஷனுக்கு கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் யார் என்று தெரியாது என்கிற நிலையில், தனது காதலை எப்படியாவது கதாநாயகி கெளரி கிஷனிடம் சொல்லிவிட வேண்டும் என்று முயற்சி செய்யும் போது கார் விபத்தில் சிக்கி கோமாவிற்கு சென்று விடுகிறார்.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் கோமாவில் இருந்து  கண் விழிக்கும் போது வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார்.

கதாநாயகன் ஜிவி.‌ பிரகாஷ்குமார் அந்த உலகத்தில் தன் காதலி கதாநாயகி கௌரி கிஷன் மனைவியாக இருக்கிறார்.

இறுதியில் கதாநாயகி கௌரி கிஷன் மனைவியாக மாறியது எப்படி? கதாநாயகன் ஜிவி. பிரகாஷ்குமாருக்கு என்ன ஆனது? கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ்குமார் பழைய உலகத்திற்கு மீண்டும் வந்தாரா? வரவில்லையா? என்பதுதான் இந்த அடியே திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த அடியே திரைப்படத்தில் கதாநாயகனாக ஜி வி பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜிவி.பிரகாஷ்குமார் பள்ளி படிக்கு மாணவனாகவும், இளைஞராகவும் நடிப்பில் மட்டுமல்லாமல் உடல் மொழியில் வித்தியாசம் காண்பித்து அசத்தி இருக்கிறார்.

கதாநாயகன் ஜிவி. பிரகாஷ்குமார் காதலி கதாநாயகி கௌரி கிஷனை
நினைத்து உருகும் போது ரசிகர்களின் மனதை கவர்ந்து இருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் குமாரின் நடிப்பு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்.

இந்த அடியே திரைப்படத்தில் கதாநாயகியாக கௌரி கிஷன் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கௌரி கிஷன், அழகாக வந்து அற்புதமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகி கௌரி கிஷன் அதிக காட்சிகளில் இருப்பதால் இருவருமே  போட்டி போட்டுக் கொண்டு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இயக்குனர் வெங்கட் பிரபு வரும் காட்சிகள் அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் மேனரிசத்தை கொண்டு வருவதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு முயற்சி செய்து இருக்கிறார்.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாருக்கு நண்பராக வரும் RJ விஜய் மிகவும் அருமையாக நடித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு நமது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்.

டைம் டிராவல் கதையை மையமாக வைத்து அடியே திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

இப்படி ஒரு கதையை தேர்வு செய்தால் திரைப்படத்திற்க்கு திரைக்கதை மிக மிக முக்கியம் என்பதை புரிந்துக் கொண்டு என்ன தெளிவாக திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

மொத்தத்தில் அடியே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படியே…