தள்ளி போகாதே திரை விமர்சனம் ரேட்டிங் –1.5 /5.

நடிகர் நடிகைகள் – அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் பிரதான், ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், வித்யுலேகா ராமன், ஆர் எஸ் ஷிவாஜி, மற்றும் பலர்.

இயக்கம் – ஆர்.கண்ணன்.

ஒளிப்பதிவு – சண்முக சுந்தரம்.

படத்தொகுப்பு – செல்வா ஆர்.கே.

இசை – கோபி சுந்தர்.

தயாரிப்பு –மசாலா பிக்ஸ். எம்.கே.ஆர்.பி புரொடக்ஷனஸ்

ரேட்டிங் –1.5 /5

தெலுங்கு திரைப்பட உலகில் நடிகர் நானி ஆதி நடிகை நிவேதா தாமஸ் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ‘நின்னுக்கோரி’ என்ற திரைப்படத்தின் அபத்தமான மொழிமாற்றம் செய்யப்பட்டது தான் இந்த ‘தள்ளிப் போகாதே’ திரைப்படம்.

ஒரு மொழியில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை அதன் சுவாரசியம் குறையாமல் அப்படியோ மொழி மாற்றம் செய்யும் போதுதான் அந்ல திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்படும் எந்த மொழியோ அந்த மொழியில் வரவேற்பைப் பெறும் என்பது தான் சாத்தியம்.

இந்த தள்ளி போகாதே திரைப்படத்தில் என்ன இப்படி மட்டமாக மொழி மாற்றம் செய்துள்ளார்களே என்றுதான் அதிர்ச்சியடைய வைக்கிறது.

இயக்குனர் கண்ணன் இந்த திரைப்படத்தை ஏன் இப்படி மொழி மாற்றம் செய்தார் என்பதற்கான காரணம் இயக்குனர் ஆர் கண்ணன் அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

கதாநாயகன் அதர்வா முரளி கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.

தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதால் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என கதாநாயகன் அதர்வா முரளியிடம் கட்டாயப்படுத்துகிறார்.

தன்னுடைய பி.ஹெச்டி படிப்பு முக்கியம் என அதற்கு மறுத்துவிட்டு டில்லி சென்றுவிடுகிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள்.

அதன்பின் சில நாட்களில் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரனுக்கும் அமிதாஷுடன் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு அதர்வா முரளியும் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் சந்தித்துக் கொள்கிறார்கள்.

ஒரு சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு வெளிநாட்டில் இருக்கும் கதாநாயகன் அதர்வா முரளியும், கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

நீ இன்னும் என்னை மறக்கவில்லை என்று கதாநாயகி அனுபமா பரமேஸ்வரனிடம் கதாநாயகன் அதர்வா முரளி கேட்க, அதற்கு அவர் மறுக்க, இருவருக்கும் விவாதம் ஏற்படுகிறது.

கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் கணவருடன் மகிழ்ச்சியா இல்லை என கதாநாயகன் அதர்வாமுரளி சொல்ல அதை மறுக்கிறார் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன்.

இந்த விவாதத்தின் முடிவில் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் வீட்டிற்கு பந்து நாட்கள் தங்க முடிவு செய்கிறார் கதாநாயகன் அதர்வா முரளி முடிவு செய்கிறார்.

Read Also  கூர்மன் திரை விமர்சனம் ரேட்டிங் 2.75/ 5

அதற்கு கதாநாயகி அனுபமா பரமேஸ்வரனின் கணவர் அமிதாஷும் சம்மதிக்கிறார்.

தன் மீதான காதலை மறக்க முடியாமல் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் இருக்கிறார் என கதாநாயகன் அதர்வா முரளிக்கு தெரிந்தால் தன்னுடன் வர வேண்டும் என கதாநாயகன் அதர்வா முரளி சவால் விடுக்கிறார்.

இந்த சவாலில் கதாநாயகன் அதர்வா முரளி வெற்றி பெற்றாரா? இல்லையா?
யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இநத கட்டி போகாதே திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அதர்வா முரளி இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார்.

தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார்.

வழக்கமான தமிழ் திரைப்பட உலகில் காதலனாக அதர்வாமுரளி.

காதலிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை.

முன்னாள் காதலியுடன் அவரது வீட்டிலேயே தங்கியிருந்து காதலியையும் அவரது கணவரையும் வெறுப்பேற்றுவதெல்லாம் தாங்க முடியவில்லை.

கதாநாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், கதாநாயகன் அதர்வா முரளியை காதலிக்கும் போது ரசிக்க வைக்கிறார்.

முன்னாள் காதலனா அல்லது கணவனா என இருவருக்கும் இடையில் தவிக்கும் காட்சியில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

இதற்காக எமோஷனலான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே.

கதாநாயகி அனுபமா பரமேஸ்வரனின் கணவராக வரும் அமிதாஷ் பிரதான் ஒயிட் காலர் கதாபாத்திரம்
கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், வித்யுலேகா ராமன், ஆர் எஸ் ஷிவாஜி, ஆகியோர் ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆர்.கண்ணன். இவர் இதற்குமுன் இயக்கிய மொழி மாற்றம் திரைப்படங்கள் ஓரளவிற்கு வெற்றி அடைந்து உள்ளது.

ஆனால், இந்த தள்ளிப்போகாதே திரைப்படம் சற்று ஏமாற்றம் தான்.

சில காட்சிகள் வேண்டும் என்றே திணித்தது போல் இருந்தது.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் கூட இல்லை.

பின்னணி இசை என வாசித்துத் தள்ளுகிறார். இடைவேளைக்குப் பின்

சண்முக சுந்தராமின் ஒளிப்பதிவு சிறப்பு.

வெளிநாட்டில் நடக்கும் கதை.

பெயருக்கு சில தெருக்களை மட்டும் காட்டி, வெளிநாடு என்கிறார்கள்.

மீதி காட்சிகள் வீட்டுக்குள்தான் நடக்கின்றன.

இந்தக் கதையே நமது தமிழ் கலாச்சாரத்திற்கு ஒத்துவராத ஒரு கதை.

இதை தமிழ் திரைப்பட உலகில் உள்ள ரசிகர்கள் ரசிப்பார்களா ஏற்றுக்கொள்வார்களா என்ற எந்த சந்தேகமும் இல்லாமல் மொழிமாற்றம் செய்யும் உரிமை வாங்கி தமிழில் எடுத்திருப்பது தேவையில்லாத வேலை.

உணர்வுபூர்வமாக கடந்து போக வேண்டிய கதை, ஏனோ தானோவென, எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் நகர்கிறது.

மொத்தத்தில் ‘தள்ளிப் போகாதே’ திரைப்படம் தள்ளாட்டம்.