நடிகர் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு

நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை திரையிட தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் இந்த படம் மீண்டும் இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில் ஆதித்யவர்மா’ என்ற பெயரில் தயாரானது. மேலும் இந்த படம் நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் வருகின்ற 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.