நாங்கள் அப்பவே விளக்கு வைத்து விட்டோம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியை கலாய்க்கிறாரா நடிகை கஸ்தூரி.
ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்றி நமது தேசத்தின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும் என நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருந்தார்.
அதாவது நாம் வாழ்வில் கொரோனா வைரசால் உருவாகியுள்ள இருளை அகற்றுவோம் என அவர் நேற்று வீடியோவில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு பற்றி பேசி இருந்தார்.
நமது பிரதமரின் இந்த கருத்துக்கு பலரும் பல்வேறு விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று நடிகர் உலகநாயகன் கமலஹாசன் கூறி வந்த கருத்தை பிரேக்கிங் செய்தியாக வெளிவந்தது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரியின் தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.
விளக்கு வைப்போம் இந்த கருத்தை நாங்கள் எப்போது கூறி விட்டோம் என்று கூறி நடிகை கஸ்தூரி நடித்த ஆத்மா திரைப்படத்தில் இடம் பெற்ற விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் என்ற பாடலை யூடியூபில் லிங்க்கை பதிவு செய்துள்ளார்.
இது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை கலாய்க்கிறார் அல்லது அப்பவே வெச்சிட்டோம் இனிமே வைக்க மாட்டோம் என்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
https://twitter.com/KasthuriShankar/status/1245953352904536064?s=19











