பாரத பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சி வருகின்ற 11ம் தேதி முதல் 13ம் தேதிவரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைவர்களை வரவேற்கும் வகையில் பேனர்களை வைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது.

இதனை தொடர்ந்து பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் பேனர் வைத்துக்கொள்ளலாம் என்றும். அரசியல் கட்சியினர் சார்பில் பேனர் வைக்க அனுமதியில்லை என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பேனர் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.