பிரபல இயக்குனர் தயாரிக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்.

தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு.

தற்போது இவர் நடிகர் யோகி பாபு இல்லாத திரைப்படங்களே இல்லை என்று சொல்லலாம்.

அந்த அளவிற்கு பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா போன்ற திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் யோகிபாபு.

இந்த புதிய திரைப்படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன் மூலம் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இந்த நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ஷான் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கயிருக்கிறார்.

இது குழந்தைகள் சம்பந்தப்பட்ட திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

இயக்குனர் பா ரஞ்சித் இதற்கு முன் நீலம் புரொடக்ஷன் மூலமாக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.