Thursday, December 9
Shadow

பில்டர் கோல்டு திரை விமர்சனம். ரேட்டிங் –2.75 /5

நடிகர் நடிகைகள் – விஜயபாஸ்கர், டோரா ஸ்ரீ, சுகுமார் சண்முகம், வெற்றி, சிவா இளங்கோ, சாய் நடராஜ், சாய் சதீஷ், வல்லவன், ஷீதல் நாயக், மற்றும் பலர்.

தயாரிப்பு – சர்வைவல் பிச்சர்ஸ்.

இயக்கம் –  விஜயாபாஸ்கர்.

ஒளிப்பதிவு – ஏம்.பரணி குமார்.

படத்தொகுப்பு – கிங் டேவிட்.

இசை – நகைச்சுவை எழிலன்

திரைப்படம் வெளியான தேதி – 22 அக்டோபர் 2021

ரேட்டிங் –2.75 /5

முதல் முறையாக தமிழ் திரைப்பட உலகில் திருநங்கைகளைப் பற்றிய இவ்வளவு வெளிப்படையான ஒரு திரைப்படம் வந்ததிருக்கிறது.

திருநங்கைகளின் குறை மற்றும் நிறைகள் பற்றி பேசியிருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை முறையை எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் விஜயபாஸ்கர்.

அதை சுவாரஸ்யமான கதையாகவும் நகர்த்தி சென்றிருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கரை பாராட்டலாம்.

இப்படி திருநங்கைகள் கதையை முழுநீள திரைப்படமாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும்.

திருநங்கைகளில் சிலர் படித்து பட்டம் பெற்று, அரசு பணி, உயர் பதவி போலீஸ் அதிகாரி, வழக்கறிஞர், என்று முன்னேறினாலும், அவர்களை பத்து அடி தள்ளி வைத்து பார்க்கும் சமுதாயம், அவர்களை என்றுமே சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கர்.

திருநங்கைகள் சந்தோஷமாக வாழ எது வேண்டுமானாலும் செய்வார்கள், என்ற எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார் இயக்குனர் விஜயபாஸ்கர்.

திருநங்கைகள் இந்த உலகத்தில் எவ்வளவு பிரச்சினைகளை
எதிர்கொள்கிறார்கள்.

திருநங்கைகள் சமுதாயத்தில் அனுபவிக்கும் துயரங்கள் பற்றி பல திரைப்படங்களில் பேசப்பட்டிருந்தாலும், அவை ஒரு காட்சிகள் மட்டுமே அல்லது சில வசனங்களோடு முடிந்து விடும்.

திருநங்கைகளின் வாழ்க்கையை மட்டுமே படமாக்காமல், அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களை காட்டும் போது, சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை போன்றவற்றை பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கர்.

அனைத்தையும் கதையுடனே பயணிக்க வைத்திருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

ஆனால், இந்த ‘பில்டர் கோல்டு’ திரைப்படம் முழுக்க முழுக்க திருநங்கைகளின் வாழ்க்கையும் மையப்படுத்திய ஒரு முழுமையான திரைப்படமாக வெளியாகியுள்ளது.

திருநங்கைகள் விஜி, சாந்தி, டோரா ஆகிய மூவரும் நட்புடன் பழகி வருகிறார்கள்.

இவர்களில் விஜி மட்டும் காசுக்கு கொலை செய்வதற்கு அஞ்சாதவர்.

திருநங்கைகளுக்கு ஒரு அவமானம் என்றால் அவர்களுக்கு முன்னால் நின்று தண்டனை கொடுக்கிறார்.

தச்சு தொழில் நடத்தும் ஒருவர் கொடுக்கும் பணத்திற்காக கொலை செய்வதை விஜி வாடிக்கையாக செய்து வருகிறார்.

Read Also  தனுசு ராசி நேயர்களே திரை விமர்சனம்

விஜய் செய்யும் குற்றச்செயல்களை ஒரு மொபைல் போனில் பதிவு செய்து வைக்கிறார்.

இவர்கள் செய்யும் கொலை குற்றச் செயல்களுக்கு காவல்துறையினர் கைது செய்தார்களா? இல்லையா? தண்டனை அனுபவித்தார்களா? இல்லையா? என்பதுதான் இங்கு பில்டர் கோல்ட் திரைப் படத்தின் மீதிக்கதை

விஜி என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கரின் பெண்மைத்தனம் கலந்த பேச்சும்ஆண்மைத்தனம் கலந்த உடல் அசைவும், அவர் கதாப்பாத்திரத்தில் மிக கச்சிதமாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

விஜி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கர் முரட்டு சுபாவம் சக தோழிகள் மீது அவர் காட்டும் பாசம், தங்களைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முன்னால் நிற்கும் அடிதடி குணம் கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார்.

விஜியின் தோழியான திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டோரா, சாந்தி தோழிகளுடன் பேசும்போது திருநங்கைகளுக்கே உரித்தான குணத்தை வெளிப்படுத்துவதும், தனது காதலனை சந்திக்கும் போது, ஒரு பெண்ணுக்கு உண்டான வெட்கத்தை வெளிப்படுத்துவதும் என நடிப்பில் அசத்துகிறார்.

கதபாத்திரங்களின் இயல்பான நடிப்பு திரைப்படம் பார்க்கும் நம்மை திருநங்கைகள் வாழும் உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது.

பள்ளி மாணவன் சுகு என்ற கதாப்பாத்திரம் மிரட்டல் என்றால், அதில் நடித்திருக்கும் வெற்றியின் தோற்றமும், நடிப்பும் திரைப்படம் பார்ப்பவர்களும் மிரண்டு போகும் அளவுக்கு மிரட்டலாக நடித்திருக்கிறார்.

திருநங்கை விஜிக்கு பணத்திற்காக கொலை செய்யும் வேலை கொடுக்கும் தச்சு தொழில் நடத்தும் சிவ இளங்கோ மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் நடித்திருக்கிறார்.

விஜயபாஸ்கர் இயக்குனராகவும் நடிகராகவும் எந்த குறையுமில்லாமல் மிக நேர்த்தியாக அவர் வேலையை செய்துள்ளார்.

திருநங்கை டோராவின் காதலனாக வரும் சாய் சதீஷ், பள்ளி மாணவன் சுகுவின் தந்தையாக நடித்திருக்கும் நட்ராஜ் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும், கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக பில்டர் கோல்ட்
திரைப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களும், அதில் நடித்திருக்கும் நடிகர்களும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த சமுதாயத்தில் தங்களைப் புறக்கணிக்கும் மனிதர்கள் மீது கோபத்தில் கொந்தளிக்கும் விஜி போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டதால் பாதிக்கப்படும் சாந்தி, பெண் உணர்வு தோன்றியதால் வீட்டிலிருந்து விரட்டப்படும் டோரா ஆகியோரின் மன உணர்வுகள் மூலம் ஒட்டு மொத்த திருநங்கைகள் வாழ்வியலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய பாஸ்கர்

ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்குமோ என்ற விறுவிறுப்பை திரைக்கதையில் எதிர்பார்ப்புகளை அதிகரித்து இருக்கிறார்..

திரைப்படத்தில் Mute வசனங்கள் அங்காங்கே வந்து போகிறது.

சில தமிழ் திரைப்பட உலகில் பாடல்கள் சம்பந்தமில்லாமல் பாடல்களை சில நாடுகளில் பாடல் காட்சிகளை படம் பிடித்திருப்பார்கள்.

Read Also  சைக்கோ திரை விமர்சனம்

ஆனால் ‘பில்டர் கோல்டு’  திரைப்படத்தில் கதையோடு ஒன்றிய இரண்டு இனிமையான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

நகைச்சுவை எழிலனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருப்பதோடு, வரிகளை புரிந்துக்கொள்ளவும் முடிகிறது.

பின்னணி இசை மூலம் திரைப்படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்திருப்பவர், பீஜியம் மூலமும் கவர்கிறார்.

பரணிகுமாரின் ஒளிப்பதிவு பாண்டிச்சேரி, கேரளா போன்ற இடங்களில் அழகாகவும், அதன் பின்னணியை அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளது.

திருநங்கைளை வைத்து எடுத்திருந்தாலும் திரைக்கதையில் சுணக்கம் இல்லாமல் கையாண்டு இருக்கிறார் இயக்குனர் விஜயபாஸ்கர்.

சில குறைகள் இருந்தாலும் திருநங்கைகள் உலகத்தைக் காட்டிய இயக்குனர் விஜய் பாஸ்கர் பாராட்டுக்குரியவர்

மொத்தத்தில் ‘பில்டர் கோல்டு’ – திரைப்படம் தமிழ் திரைப்பட உலகத்திற்கு புதிய உலகம்.

CLOSE
CLOSE