ரசிகர்களின் சந்திப்பை கொஞ்ச நாளைக்கு தவிர்த்து வந்த திடீரென துப்புரவு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்தி மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன்.

இந்தி திரைப்பட உலகில் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை ஜூகுவில் உள்ள தனது ‘ஜல்சா’ பங்களாவில் ரசிகர்களை சந்தித்து வந்தார்.

வாரம் தோறும் தனது ரசிகர்களை சந்தித்து வந்த இந்தி திரைப்பட உலகில் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பின் காரணமாக வாராந்திர ரசிகர்களின் சந்திப்பை தற்போது நிறுத்தினார்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக செய்து வருகின்றன.

பொதுமக்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படி விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசுகள் செய்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு பயத்தில் உள்ள இந்தி திரைப்பட உலகில் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், தன்னை சந்திக்க ரசிர்கள் யாரும் வீட்டு பக்கம் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.

மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அமிதாப்பச்சன் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் கொஞ்ச நாளைக்கு தவிர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், என் மேல் அன்பு கொண்ட அனைவருக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒரு வேண்டுகோள்! தயவுசெய்து இன்று என் வீட்டு வாசலுக்கு ( ஜல்சா வீட்டு வாயிலில்) வர வேண்டாம் … ஞாயிற்றுக்கிழமை சந்திப்புக்கு நான் வரப்போவதில்லை! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள் … பாதுகாப்பாக இருங்கள்.” என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில், ஜல்சா பங்களா வீட்டு முன் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது துப்புரவு பணியாளர்கள் முன் அமிதாப் பச்சன் தோன்றி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த சந்திப்பின் போது, தெருவை சுத்தம் செய்யும் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.