காட்டேரி திரை விமர்சனம் ரேட்டிங்:-2.75./5

நடிகர் நடிகைகள் :-  வைபவ், சோனம் பாஜ்வா, வரலஷ்மி சரத்குமார், மதுமிதா
கருணாகரன், ஆத்மிகா, ரவி மரியா, குட்டி கோபி, ஜான் விஜய், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- டி.கே.

ஒளிப்பதிவு :- விக்னேஷ் வாசு.

படத்தொகுப்பு :- பிரவின் KL.

இசை :- பிரசாத் SN.

தயாரிப்பு :-  ஸ்டுடியோ கிரீன்,

ரேட்டிங் :- 2.75 / 5.

தமிழ் திரைப்பட உலகில் பல்வேறு விதமான பேய் திரைப்படங்களை பார்த்து போரடித்துவிட்டது,

அதனால் பேய் திரைப்படத்தை வித்தியாசமாக காட்ட வேண்டும் என்று காட்டேரியை திரைப்படத்தை காட்டியிருக்கிறார்கள்.

கொஞ்சம் கதையுடன்
காட்டேரி திரைப்படத்தை காட்டியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

யோசிக்காமல் சிந்திக்காமல்
மனதில் தோன்றியதை கதை என எழுதி அதைப் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டிகே.

ஒரு குக்கிராமத்தில் இருக்கும் தங்கத்தை புதையலை கண்டுபிடித்து எடுத்து வருவதற்காக கதாநாயகன் வைபவ், அவரது மனைவி, சோனம் பாஜ்வா, கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி மற்றும் அந்த தங்கப் புதையலைப் பற்றிச் சொன்ன ஆத்மிகா ஆகியோர் தங்கப் புதையலை தேடி செல்கிறார்கள்.

அந்த குக்கிராமத்தில் உள்ள அனைவரும் பேயாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

சில பல பேய்களை சந்தித்து தப்பிய பின் பேயாக உலவும் வரலட்சுமி சரத்குமாரிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.

அங்கு எதிர்கொள்ளும் அமானுஷ்ய அனுபவங்கள் குலைநடுங்க வைக்கின்றன.

குக்கிராமத்தில் செனற அனைவரும் தங்கப் புதையலை கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்க வில்லையா? வரலட்சுமி சரத்குமாரிடம் மாட்டிக்கொண்ட அனைவரும் தப்பித்தார்களா என்ன ஆனார்கள் அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் இநத காட்டேரி திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த காட்டேரி திரைப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகன் வைபவ் செய்யும் காமெடி அருமையாக இருக்கிறது.

இந்த காட்டேரி திரைப்படத்தில் கதாநாயகியாக சோனம் பஜ்வா, ஆத்மிகா இருவரும் நடித்து இருக்கிறார்.

சோனம் பாஜ்வா,ஆத்மிகாவின் கதாபாத்திரங்களில் இருக்கும் மர்மத் தன்மை ரசிக்க வைக்கிறது.

ஃபிளாஷ்பேக்கில் வரும் மாதம்மா கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மிகவும் கச்சிதம்.

நான் அழகா இருக்கேனா’ எனக் கேட்டு வரும் வரலட்சுமி சரத்குமார் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார்.

திரைப்படத்தில் பிளாஷ் பேக் காட்சிகள் மட்டும் பரவாயில்லை ரகம்.

கதாநாயகன் வைபவ் அவரது நண்பர் கஜாவாக வரும் கருணாகரனின் நாகரிகமான நக்கல்கள் நச், ரவி மரியா,
குட்டி கோபி காமெடி காட்சிகள் அனைத்தும் அருமை.

பேயை அடக்கும் சாமியாராக வரும் பொன்னம்பலம் ரசிக்க வைக்கிறார்.

இவர்கள் அனைவரும் திரைப்படம் ஆரம்பத்திலிருந்து திரைப்படத்தின் கடைசி வரை ஒன்றாகவே சுற்றுகிறார்கள்.

இசையில் குறிப்பிட்டு சொல்ல எதுவும்இல்லை.

இரவுக் காட்சிகள், ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்கு தேவைப்படும் ஒளியமைப்பு, வண்ணத்தை கலந்து கொடுத்திருப்பதில் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசுவின் உழைப்பு அபாரம்!

முன்கதையை வலுவாக அமைத்த இயக்குநர் டி.கே அதை நோக்கிப் பயணிக்கும் நிகழ்கதையை வலுவாக்காமல், அவல் என நினைத்து வெறும் உரலை இடித்திருக்கிறார்.

திரைப்படத்தின் அதிகப்படியான காட்சிகளை இலங்கையில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

இரவு நேரத்தில் பேய்களைக் காட்டுவதற்கு எதற்காக இலங்கை போய் படப்பிடிப்பு நடத்த வேண்டும் நமது தமிழகத்திலேயே எடுத்திருக்கலாமே இலங்கை சென்றதற்கான காரணம் தெரியவில்லை.

மொத்தத்தில் காட்டேரி திரைப்படம் காட்டேரி பேய் திரைப்படம என்று சொல்லி ஏமாற்றி விட்டார்கள்.

error: Content is protected !!