இடியட் திரை விமர்சனம் ரேட்டிங் 1.75 / 5

நடிகர் நடிகைகள் – மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், ஊர்வசி, கிங்ஸ்லி, அக்ஷரா கவுடா, ரவி மரியா, மயில்சாமி,சிங்க முத்து, RNR மனோகர், சிவ சங்கர் மாஸ்டர், மற்றும் பலர்.

இயக்கம் – ராம்பாலா.

ஒளிப்பதிவு – ராஜா பட்டாச்சார்ஜி.

படத்தொகுப்பு – மாதவன்.

இசை – விக்ரம் செல்வா.

தயாரிப்பு – ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்

ரேட்டிங் – 1.75 / 5

தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2′ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா தான் இடியட் திரைப்படத்தின் இயக்குனர்.

அவரா இப்படி ஒரு மட்டமான திரைப்படத்தை இயக்கினார் என ஆச்சரியமாக உள்ளது.

முந்தைய இரண்டு திரைப்படங்களிலும் திரைப்படம் முழுவதும் சிரிக்க வைத்திருப்பார்.

சிரிக்க வைத்ததற்கு காரணம் கதையில் சந்தானத்தின் தலையீடு அதிகமாக இருந்ததால் திரைப்படம் வெற்றி பெற்றது

இந்த இடியட் திரைப்படத்தில் எங்கோ ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்.

பழமை வாய்ந்த பல நாட்களாக பாழடைந்த பங்களா, பழி வாங்கத் துடிக்கும் ஆவிகள், பேய்கள் அந்த பங்களாவுக்குள் மட்டிக் கொள்ளும் அப்பாவிகள், பேயை விரட்ட வரும் மந்திரவாதிகள் சூனியக்காரர்கள் என காலம் காலமாய் தமிழ் திரைப்பட உலகில் வரும் அதே பேய்க் கதைதான் இந்த ‘இடியட்’ திரைப்படம்.

காலம் காலமாய் தமிழ் திரைப்பட உலகில் ஒரே பார்முலாவில் இருந்து எதையும் மாற்றி எடுத்துவிடக் கூடாது என பிடிவாதமாய் இருந்து எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது.

மன்னர்களின் சொத்துக்களையும் இரண்டு காவலாளிகள் சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டம் தீட்டுகிறார்.

மன்னர் காலத்தில் அவர்களை ஏமாற்றி அனைத்து சொத்துக்களை இரண்டு காவலாளிகள் தன்வசம் படுத்தி கொள்கிறார்கள்.

வீரபாண்டியன் என்ற கிராமத்தில் ஊர் தலைவராக இருக்கும் ராசு ஆனந்தராஜ் அவருடைய மகன் சின்னராசு கதாநாயகன் சிவா மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஒரு சிறு விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்படுகிறார் மிர்ச்சி சிவா.

அச்சமயத்தில் அவருக்கு சிகிச்சை கொடுக்க கதாநாயகி நிக்கி கல்ராணி பணிபுரியும் மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

அதே மருத்துவமனையில் இருக்கும் கதாநாயகி நிக்கி கல்ரானி மீது அவருக்குக் காதல் மலர்கிறது.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூனியக்காரி அக்ஷரா கவுடா, நிக்கி கல்ராணியை கடத்தி தனது காதலனுடன் ஒன்று சேர முயற்சிக்கிறார்.

இன்னொரு பக்கம் நிக்கி கல்ராணியைக் கடத்தி அவரது தந்தையிடம் பணம் பறிக்க முயல்கிறார் ரவிமரியா.

Read Also  வானம் கொட்டட்டும் - திரை விமர்சனம். ரேட்டிங் - 3./5

அதேபோன்று 4 அடியாட்களுடன் வில்லன் ரவிமரியா இவர்கள் அனைவரும் ஒரு பழைய பங்களாவில் மாட்டிக்கொள்கிறார்கள்.

இவர்களை அனைவரும் ஒரு பேய் பங்களாவுக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை.

அங்கிருந்து எப்படி தப்பித்து செல்கிறார்கள்? அக்ஷரா கவுடா தன் நோக்கத்தை அடைய கதாநாயகி நிக்கிகல்ராணி உயிரை எடுத்தாளா? காதலியை கதாநாயகன் சிவா கரம் பிடித்தாரா? என்பதுதான் இடியட் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக வரும் மிர்ச்சி சிவா அவருடைய எதார்த்த காமெடி கலந்த இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரான கதாநாயகன் மிர்ச்சி சிவா நடிப்பு சிறப்பு.

திரைப்படத்தின் காமெடிகள் சாதாரணமாக இருந்ததால் திரைப்படத்தில் பயணிக்க சிரமமாக இருந்தது.

அவ்வப்போது அவர் அடிக்கும் ‘ஒன்லைன்’ காமெடிகள் தான் படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது.

கதாநாயகிகளாக வரும் நிக்கி கல்ராணி, அக்ஷரா கவுடா இருவரும் அவர்களுடைய பணியை சிறப்பாக நடித்துள்ளார்கள்.

கதாநாயகி நிக்கி கல்ராணி வைத்து கொண்டு ஒரு பாடல் கூட இல்லாதது மிகவும் ஏமாற்றம்.

சிகிச்சை பெறும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் திரைக்கதை நகர்வதற்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.

ஆனந்த்ராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து, ரவிமரியா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசர்ஜி தன் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

காட்சியமைப்பின் மூலம் படத்தின் விறுவிறுப்பை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்.

விக்ரம் செல்வா இசை மற்றும் பிண்ணனி இசை அதிகம் ஈர்க்கவில்லை.

வழக்கம் போல் பேய் திரைப்படங்களுக்கு உரித்தான பழைய பங்களாக்களில் நடக்கும் கதை என்பதால் பெரிதாக ஸ்வாராசியம் இல்லை.

தில்லுக்கு துட்டு திரைப்படங்களில் இடம்பெற்ற காமெடிகளை எதிர்ப்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு சற்று மிக பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

இயக்குனர் ராம்பாலா முந்தைய படைப்புகளை போன்ற நகைச்சுவை கொடுக்காதது திரைப்படத்தின் சரிவு.

கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் சிவா மொத்த பேரையும் சாகடிப்பது இவர் தான் என்பதை கைகாட்டி கூறுகிறார் அவர்தான் இடியட் திரைப்படத்தின் இயக்குனர் ராம்பாலா.

மொத்தத்தில் ‘இடியட்’ திரைப்படம் மிக பெரிய ஏமாற்றம்.