பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்.

சென்னை 17 மே 2021

பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை மிகத்தீவிரமாக உள்ளது.

முதல் அலையின் போது உயிரிழப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது நாள்தோறும் 300க்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

வீரியம் மிக்க வைரஸ் என்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அதற்கு அரசியல் பிரபலங்கள் திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருகின்றனர்.

அதுமட்டுமன்றி கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தற்போது திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக திரையுலகை சேர்ந்த பலரும் நோய் தொற்றுக்கு ஆளாகி பலியாகி வருகின்றனர்.

நடிகர் கில்லி மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், நடிகர் பாண்டு இயக்குநர்கள் தாமிரா கேவி ஆனந்த் என கொரோனாவால் உயிரிழந்த  திரைதுறை பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது.

இந்த நிலையில் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா வைரஸ் நோய் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணியளவில் உயிர் பிரிந்தது.

இவர் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் மற்றும் காலா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றதன் மூலம் நடிகர் விமல் மற்றும் நடிகர் விஜய் சேதுபதிக்கு மிக நெருங்கிய நண்பர்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

error: Content is protected !!