நடிகர் விவேக் மறைவிற்கு தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் இரங்கல்.
சென்னை 17 ஏப்ரல் 2021
நடிகர் விவேக் மறைவிற்கு தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் இரங்கல்.
பி.ஆர்.ஓ.யூனியன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.
“சின்னக்கலைவாணர் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட விவேக் காலமானது.
தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பாகும்.
அவரைப்பற்றி நல்ல விஷயங்கள் மட்டுமே வந்து கொண்டு இருந்ததே தவிர தவறான செய்தி ஒருபோதும் வந்ததில்லை.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் இதயத்தில் இடம்பிடித்த ஒப் பற்ற கலைஞன்தான் விவேக்.
கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் இராமநாராயணன் இயக்கத்தில் நிறைய நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜா. கே.பாக்யராஜ், வி.சி.குகநாதன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், விசு, கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு. வி.சேகர், உதயகுமார், சுந்தர்.சி. டி.பி.கஜேந்திரன், மனோஜ்குமார்.மோகன்ராஜா, ஏ.எல்.விஜய் மட்டுமல்ல புதுமுக இயக்குனர்கள் படங்களிலும் நடித்தவர்.
ரஜினி, விஜயகாந்த். பிரபு. சத்யராஜ். முரளி, ராம்கி, பாண்டியராஜன். கார்த்திக், விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி. தனுஷ், சிம்பு, விஷால், கவுண்டமணி, கார்த்தி, கரண், ராதாரவி.நாசர், வாகை சந்திரசேகர், எஸ்.வி.சேகர், நெப்போலியன், பிரகாஷ்ராஜ், மம்முட்டி, வடிவேல், சந்தானம், லிவிங்ஸ்டன் என அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளவர்தான் விவேக். மத்திய, மாநில அரசின் விருது பெற்றவர்.
அவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது அவரது குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
விஜயமுரளி (தலைவர்)
பெருதுளசிபழனிவேல் (செயலாளர்)
B. யுவராஜ்(பொருளாளர்)
கோவிந்தராஜ் (துணைத்தலைவர்)
இராமானுஜம் (துணைத்தலைவர்)
இரா.குமரேசன் (இணைச்செயலாளர்)
M.P.ஆனந்த் (இணைச்செயலாளர்)
இப்படிக்கு
தெ.தி.ப.தொ யூனியன்











