படை தலைவன் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சண்முக பாண்டியன், கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், முனீஸ் காந்த், ஏ வெங்கடேஷ், கருடன் ராம், ரிஷி, யூகி சேது, அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, லோகு NPKS, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- யூ அன்பு.

ஒளிப்பதிவாளர் :- ஏஸ் ஆர் சதீஷ்குமார்.

படத்தொகுப்பாளர் :- எஸ்.பி.அகமத்

இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- வி ஜே காம்பென்ஸ்.

தயாரிப்பாளர் :- ஜெகநாதன் பரமசிவம் , ராஜு காளிதாஸ்.

ரேட்டிங் :- 2.5/5.

பொள்ளாச்சி சேத்துமடை கிராம பகுதியில் தங்கை மற்றும் தந்தை கஸ்தூரி ராஜாவுடன் கதாநாயகன் சண்முக பாண்டியன் ஒரு யானையுடன் வசித்து வருகிறார்.

கதாநாயகன் சண்முக பாண்டியனின் தந்தை கடனில் தவிக்கும் கஸ்தூரிராஜாவின் துன்பத்தை போக்க தன் வளர்க்கும் யானையை விழாக்களுக்கு அழைத்து சென்று வரும் பணத்தில் கடனை அடைத்து கொள்ளலாம் என கதாநாயகன் சண்முக பாண்டியன் கூறுகிறார்.

அந்த ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் ஒருவர் சிலர் சதி வேலை செய்து கதாநாயகன் சமூக பாண்டியன் வளர்க்கும் யானைக்கு மதம் பிடிக்க வைக்கிறார்கள்.

இதையடுத்து கதாநாயகன் சண்முக பாண்டியனின் யானையை காட்டு வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர்.

தனது யானையை மீட்க கதாநாயகன் சண்முக பாண்டியன் மற்றும் தந்தை கஸ்தூரிராஜா கோர்ட் படிகளில் வேறு யானையை மீட்பதற்காக போராடுகிறார்கள்.

இந்த நிலையில் கதாநாயகன் சண்முக பாண்டியன் மற்றும் தந்தை கஸ்தூரிராஜா யானை பார்ப்பதற்காக கோர்ட் ஆர்டர் உடன் செல்லும் இவர்களிடம் யானை காணாமல் போய்விட்டதாக காட்டு வனத்துறை அதிகாரி கூறுகிறார்.

கதாநாயகன் சண்முக பாண்டியன் மற்றும் தந்தை கஸ்தூரிராஜா இருவரும் அதை ஏற்க மறுக்கும் யானையை தேடி கண்டுபிடித்து அழைத்து வருகிறேன் என கதாநாயகன் சண்முக பாண்டியன் யாரைத் தேடி புறப்படுகிறார்.

இந்த நிலையில் கதாநாயகன் சண்முக பாண்டியனை தீர்த்து கட்டுவதற்காக ஒரு மிகப்பெரிய கூட்டம் ஒன்று சுற்றி அலைகிறது.

கதாநாயகன் சண்முக பாண்டியன் தனது யானையை கண்டு பிடித்தாரா! கண்டு பிடிக்கவில்லையா!

கதாநாயகன் சண்முக பாண்டியனை தீர்த்து கட்டுவதற்காக திரியும் கூட்டத்திலிருந்து கதாநாயகன் சண்முக பாண்டியன் தப்பினாரா! தப்பவில்லையா? என்பதுதான் இந்த படைத்தலைவன் திரைப்படத்தின் மீதிக்கதை

இந்தப் படைத்தலைவன் திரைப்படத்தில் கதாநாயகனாக சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சண்முக பாண்டியன் நடிப்பில் மற்றும் ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும்
சண்முக பாண்டியனுக்கு ஜோடி கிடையாது.

கதாநாயகன் சண்முக பாண்டியன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கஸ்தூரிராஜா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏழை என்றாலும் கவுரவத்தை விட்டுக் கொடுக்காத கதாபாத்திரமாக வாழ்ந்து காண்பித்து இருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருடா ராம் மாடு பலி, யானை பலி என்ற கொடூரமான சாமியாராக காட்டுத் தனமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இவர்களுடன் யாமினி சந்தர், முனிஷ் காந்த், ரிஷி, ஏ.வெங்கடேசன், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், லோகு என் பி கே எஸ் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளோடு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் செல்கிறது.

இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்தாஸ் கதாபாத்திரத்திற்கு டிராக் வாய்ஸ் இணைத்திருப்பது மிகவும் மட்டமாக இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் கதையும் ஏற்கனவே வெளியான ராஜா பீமா என்ற திரைப்படத்தின் கதையும் ஒரே மாதிரியாக இருப்பதால் அந்த படத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் இயக்கியிருக்கிறார் இயக்குனர் யூ அன்பு.

மொத்தத்தில் படைத்தலைவன் திரைப்படம் சுமாராக உள்ளது.

error: Content is protected !!