’யுஐ’ (UI) திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- உபேந்திரா, ரீஷ்மா நானையா, அச்யுத் குமார், பி. ரவிசங்கர், சாது கோகிலா,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- உபேந்திரா.
ஒளிப்பதிவாளர் :- எச்.சி. வேணுகோபால்
படத்தொகுப்பாளர் :- விஜய் ராஜ் பி ஜி.
இசையமைப்பாளர் :- பி.அஜனீஷ் லோக்நாத்.
தயாரிப்பு நிறுவனம் :- லஹரி ஃபிலிம்ஸ் & வீனஸ் எண்டர்டெய்னர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- ஜி. மனோகரன், ஸ்ரீகாந்த் கே.பி, பௌமிக் கோண்டலியா.
ரேட்டிங்:- 2.5./5.
பிரபல திரைப்பட இயக்குநரான உபேந்திரா இயக்கத்தில் திரைப்படம் ஒன்று திரையரங்குகளில் வெளியாகு திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பைத்தியம் பிடித்தது போல் ஆகி விடுகிறார்கள்.
சில ரசிகர்கள் தைரியமான சில முடிவுகளை எடுக்கிறார்கள்.
இதனால், அந்த திரைப்படத்தை மற்றொரு தரப்பு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் மற்றொரு தரப்பினர் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்
முன்னணி திரைப்பட விமர்சகர் அந்த திரைப்படத்தை நான்கு முறை பார்த்த பிறகும் விமர்சனம் எழுத முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
இதனால், அந்த திரைப்படம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கும் அவர், இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனரை தேடி சென்றவர்களுக்கு, அவருடைய தேடலுக்கான விடை கிடைத்ததா?, கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த யுஐ திரைப்படத்தின் மீதிக்கதை
இந்த யு ஐ திரைப்படத்தில் கதாநாயகனாக உபேந்திரா நடித்திருக்கிறார்.
சத்யா மற்றும் கல்கி பகவான் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கதாநாயகன் உபேந்திரா, சத்யா கதாபாத்திரத்தில் அந்த மக்களை விரும்பும் மென்மையாகவும், மக்களை அழிக்கும் கல்கி கதாபாத்திரத்தில் மிரட்டலாகவும் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் ஆரம்பக்காட்சியில் இரத்தம் தெறிக்க தெறிக்க எண்ட்ரி கொடுக்கும் கதாநாயகன் உபேந்திரா, எதிரிகளையும் எதிராளிகளையும் அடித்து வந்தாடுவார் என நினைத்தால் அவர்களிடம் தன் உடம்பை கொடுத்து பஞ்சராக்கிக் கொண்டு மாஸ் காட்டியிருக்கிறார்.
இந்த யு ஐ திரைப்படத்தில் கதாநாயகியாக ரீஷ்மா நானய்யா, நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரீஷ்மா நானய்யா, பாடல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள்.
கதாநாயகிக்கு திரைப்படத்தில் புதிதாக வேலை இல்லை.
திரைப்பட விமர்சகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முரளி சர்மா, உபேந்திராவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அச்யுத் குமார், ஓம் சாய் பிரகாஷ், சது கோகிலா என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் கொடுத்த வேலையை குறையில்லாமல் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எச்.சி. வேணுகோபாலின் ஒளிப்பதிவு வி.எஃப்.எக்ஸ் கலைஞரும், கலை இயக்குநரும் துணையோடு உழைத்திருப்பது திரைப்படம் முழுவதும் தெரிகிறது.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கேற்றவாறு பயணித்திருக்கிறார் .
யுனிவர்சல் இண்டலிஜன்ஸ் என்பதன் சுருக்கமான UI-மூலம் அரசியலை நையாண்டியாக மட்டும் இன்றி, ஃபேண்டஸியாகவும் பேசியிருக்கும் இயக்குநர் உபேந்திரா.
எழுதி இயக்கியிருக்கும் நடிகர் உபேந்திரா, உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை பேசியிருந்தாலும், எதையும் நேரடியாக பேசாமல் குறியீடாக காட்டி பேசியிருக்கிறார்.
மொத்தத்தில் – இந்த ‘யுஐ’ புத்திசாலிகளுக்கு மட்டுமான திரைப்படம்.











