’படவா’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விமல், சூரி, ஷ்ரிதா ராவ், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர், சரவண சக்தி, சாம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கே வி நந்தா.
ஒளிப்பதிவாளர் :- ராமலிங்கம்.
படத்தொகுப்பாளர் :- வினோத் கண்ணா.
இசையமைப்பாளர் :- ஜான் பீட்டர்.
தயாரிப்பு நிறுவனம் :- ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல்.
தயாரிப்பாளர் :- இசையமைப்பாளர் ஜான் பீட்டர்..
ரேட்டிங் :- 2.75./5.
கதாநாயகன் விமல், மற்றும் தன்னுடைய நண்பர் சூரியுடன் சேர்ந்துக் கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, மட்டுமல்லாமல் கிடைக்கும் பொருட்களை திருடி விற்று விட்டு குடிப்பது, ஊர் மக்கள் அனைவருக்கும் இரவு நேரங்களில் தொல்லை கொடுப்பது என்று மற்றவர்களுக்கு பாரமாக விருந்து வருகிறார்கள்.
இதனால் கதாநாயகன் விமல் நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஆனால், அங்கு கதாநாயகன் விமல் செய்து வந்த வேலை பறிபோக மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பி வருகிறார்.
கதாநாயகன் விமலை கண்டால் பயந்து ஓடும் ஊர் மக்கள், இந்த முறை மாலை மரியாதை மற்றும் வெடி வெடித்து கதாநாயகன் விமலை வரவேற்பது மட்டுமல்லாமல், அவரை ஊர் தலைவராகவும் ஒரு மனதாக
தெர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த நிலையில் அந்த கிராம மக்களின் மாற்றத்திற்கான காரணம் என்ன?, மக்களின் மாற்றம் கதாநாயகன் விமலை வரவேற்க காரணம் என்ன? கதாநாயகன் விமலின் வாழ்க்கையில் எப்படியாப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துகிறது?, என்பதுதான் இந்த ‘படவா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த படவா திரைப்படத்தில் கதாநாயகனாக விமல் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விமல் நடிப்பு அப்பாவித்தனமான முகமும், வெகுளித்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது.
கதாநாயகன் விமல் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரி, கதாநாயகன் விமலுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என்று தன்னால் முடிந்த அளவுக்கு மக்களை சிரிக்க முயற்சித்து இருக்கிறார்.
இந்த படவா திரைப்படத்தில் அறிமுக நாயகியாக ஷ்ரிதா ராவ் நடித்திருக்கிறார்.
அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் புதுவரவு ஷ்ரிதா ராவ், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
கதாநாயகன் விமல் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி, மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நமோ நாராயணன், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை மிகச்சிறப்பாக திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்த இருக்கிறார்.
நிலத்தடி நீரின் பாதிப்பையும் விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேலம் மரங்களை சிலர் தங்களது சுயநலத்திற்காக வளர்ப்பதை பற்றி மேலோட்டமாக பேசியிருந்தாலும், அதை அழிப்பதற்கான பிரச்சாரத்தை அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெறுகிறார் இயக்குனர் கே.வி.நந்தா.
மொத்தத்தில், ‘படவா’ திரைப்படம் காமெடி கலாட்டா.











