மலையாள திரைப்பட வில்லன் நடிகர் அனில் முரளி காலமானார்.
மலையாளத்தில் பிரபலமான நடிகர் அனில் முரளி இன்று காலமானார்.
இவர் 1993 ஆம் ஆண்டு ’கன்னியாகுமரியில் ஓர் கவிதா’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகத்திற்கு அறிமுகமானார்.
பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் திரைப்படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 6 மெழுகுவர்த்திகள், ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் தனுஷ் உடன் கொடி, சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கல்லீரல் பிரச்சினைக்காக கேரளா கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருத்தார்.
இந்த நிலையில இன்று சற்றுமுன் (வியாழக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 56.
அவரின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.











