இயக்குநர் டி.ராஜேந்தர் தலைமையில் புதியதாக தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ உதயம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு புதியதாக சங்கமும் உருவாகியுள்ளது.
இந்த புதிய தயாரிப்பாளர் சங்கத்தை இயக்குநர் டி.ராஜேந்தர் தலைமையில் துவக்கியிருக்கிறார்.
இந்த புதிய சங்கத்திற்கு ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
கடந்த நவம்பர் 22 ஆம் தேதி நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் படு தோல்வியடைந்த டி.ராஜேந்தர் அந்த தோல்வியை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதுவும்.. 2 ஆம் தேதி அன்று காலையில்தான் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் அவர்கள் முன்னிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு நேரத்தில் டி.ராஜேந்தர் இப்படி ஒரு வேலையை செய்திருக்கிறார்.
இ்ந்தப் புதிய சங்கம் சென்னை தெற்கு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த புதிய சங்கத்தை நேற்று டிசம்பர் 1-ம் தேதியன்று பதிவு செய்யப்பட்டிருப்பதாக சங்கப் பதிவாளர் ஒப்புதல் கடிதம் அளித்திருக்கிறார்.
இந்த புதியதாக உருவாகியுள்ள ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கத்திற்கு டி.ராஜேந்தரே தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த புதிய சங்கத்திற்கு ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய சங்கத்திற்கு கே.ராஜன் பொருளாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி.ராஜேந்தர் அணியில் சார்பாக சமீபத்திய தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அனைத்து தயாரிப்பாளர்களும் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனராம்.
கடந்த நவம்பர் 22 ஆம் தேதி நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில் முரளி ராமசாமி அணியினர் மிகப் பெரிய அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும்.
நடந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், தங்கக் காசு டிவிக்கள் என்று பல்வேறு அன்பளிப்புகளை அள்ளி வழங்கியதாலேயே அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிட்டதாக டி.ராஜேந்தர் அணியினர் புகார் தெரிவித்தனர்.
ஆனால் தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி ஒய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் அதனை ஏற்க முடியாது என்று தேர்தல் கண்டிப்பாக செல்லும் என்று அறிவித்துவிட்டார்.
மேலும் இந்த இடத்தில் அங்கேயிருந்து நாங்கள் அவமானப்பட விருப்பமில்லை என்று சொல்லி டி.ராஜேந்தர் வெளியேறியிருக்கிறார்.
தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்களுக்கென்று இந்தப் புதிய சங்கத்தையும் சேர்த்து மொத்தம் 7 சங்கங்கள் இருக்கின்றன.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
கில்டு
தென்னிந்திய திரைப்படம்-டிவி தயாரிப்பாளர்கள் சங்கம்,
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்,
தமிழ் திரைப்பட டிஜிட்டல் தயாரிப்பாளர் சங்கம்.
தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்
ஆல் இந்தியா பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ்
எனவே 7 சங்கங்களாக தயாரிப்பாளர்கள் பிரிந்திருக்கின்றனர்.
ஒன்றாகக் குரல் கொடுத்தாலும் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் தமிழ்த் திரையுலகத்துக்குள்ளேயே நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
இப்படி 7 சங்கங்களாக பிரிந்து சென்று யாருக்காக இவர்கள் போராடப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
ஒரு தனி மனித ஈகோவினால்தான் சங்கங்கள் பிரிகிறது சாகின்றன என்று பல திரை துறையில் உள்ள பிரபலங்கள் சொல்லி வருகிறார்கள்.
அது இப்போது டி.ராஜேந்தரின் இந்த புதிய சங்க முடிவிலும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
இந்தத் தமிழ்த் திரையுலகத்தை இனிமேல் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..!
இருக்கின்ற சங்கங்களே போதாதா என்னும் நிலையில்
தற்போது டி ராஜேந்தர் தனக்கென்று ஒரு புதிய சங்கத்தைத் திட்டமிட்டு துவக்கியிருக்கிறார்.
இந்த சங்கங்கள் பிரிவதால் தமிழ் திரைப்பட உலகில் உள்ள சிறு திரைப்பட தயாரிப்பாளர் யாருக்கும் நல்லது நடக்கப் போவதில்லை.
*உதயமானது “ தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்”*
'தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரில் டி.ஆர்.தலைமையில் புது அமைப்பு உருவாகிறது.
இந்த அமைப்பு வரும் டிசம்பர் 5ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிற து.
@KskSelvaPRO #moviewingz@tfapatn pic.twitter.com/zB1t49kail— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) December 2, 2020












