பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதிி.

சென்னை 08 மே 2021

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை மிக் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத்.

இவர் தமிழில் தற்போது தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.

இதில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!