சட்டவிரோதமாக ராதே திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாலிவுட் நடிகர் சல்மான்கான்்.
சென்னை 18 மே 2021
சட்டவிரோதமாக ராதே திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாலிவுட் நடிகர் சல்மான்கான்
பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான் அவருடைய ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே இந்தி திரைப்படம் கொரோனாவால் திரை அரங்குகளுக்கு பதிலாக OTT தளத்தில் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது ராதே திரைப்படம்.
தொகை செலுத்தி படம் பார்க்கும் முறையில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் ராதே திரைபபடம் OTT இனையத்தளத்தில் வெளியான சில மணி நேரத்தில் திருட்டுத் தனமாக இணையத்தளத்திலும் வெளிவந்தது.
ரசிகர்கள் பலரும் திருட்டுத் தனமாக இணையதளத்தில் இந்த ராதே திரைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.
இந்த ராதே திரைப்படத்தின் படக்குழுவினருக்கு மிக பெரிய பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சட்டவிரோதமாக ராதே திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறியதாவது:
“ராதே திரைப்படத்தை நியாயமான விலையாக ரூ.249 கட்டணம் செலுத்தி பார்க்கும்படி கோரியிருந்தோம்.
இந்த படத்தை திருட்டு இணைய தளத்தில் வெளியிட்டு இருப்பது பெரிய குற்றம். சட்டவிரோதமான திருட்டு இணைய தளங்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த திருட்டு இணைய தளத்தில் இருந்து ரசிகர்கள் படம் பார்க்க வேண்டாம்.
மீறி பார்த்தால் அவர்கள் மீதும் சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கான்











