சுப்ரமணியபுரம்’ வெற்றி திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிறது இயக்குநர் சசிகுமாருக்கு வாழ்த்துகள் வந்து கொண்டே இருக்கிறது.

சென்னை 05 ஜூலை 2021

‘சுப்ரமணியபுரம்’ வெற்றி திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிறது இயக்குநர் சசிகுமாருக்கு வாழ்த்துகள் வந்து கொண்டே இருக்கிறது.

2008-ம் ஆண்டு இதே ஜூலை 4-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது ‘சுப்பிரமணியபுரம்’.

இந்த திரைப்படத்தில் இயக்குநர் சசிகுமார், ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி மற்றும் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்திற்கு
ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான திரைப்படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தை
சசிகுமார் இயக்கியிருந்தார்.

1980-களின் மதுரையில் ‘சுப்ரமணியபுரம்’ என்ற பகுதியில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதன் கதை, திரைக்கதையாக்கம், கலை இயக்கம், நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக படம் பெரிதும் கொண்டாடப்பட்டது.

ஆனால் இந்த திரைப்படம் வெளிவந்த பின்புதான் அரிவாள்களைத் தாங்கிய வன்முறை கலாச்சாரமும் தமிழ் திரைப்படங்களில் அதிகமானது.

இந்த திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனதையொட்டி டிவீட்டரில் இயக்குநர் சசிகுமார் இதனைக் குறிப்பிட்டு, “ஜூலை-4. இந்த நாளில்தான் எனது முதல் திரைப்படமான ‘சுப்ரமணியபுரம்’ வெளியானது.

இந்த சுப்ரமணியபுரம் புகைப்படம் வெளியாகி
12 ஆண்டுகள் ஓடிவிட்டன.

இந்த திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு உதவியவர்களுக்கும், திரைப்படத்தின் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் எனது நன்றிகள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையொட்டி திரைப்படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களும், ரசிகர்களும், சமூகவலைத்தளவாசிகளும் சசிகுமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.

https://twitter.com/Sasikumar_FC/status/1411578201646669839?s=19

error: Content is protected !!