நடிகர் காளிதாஸ் ஜெயராமை இயக்கும் இயக்குநர் கிருத்திகா உதயநிதி: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை 06 ஜூன் 2021

நடிகர் காளிதாஸ் ஜெயராமை இயக்கும் இயக்குநர் கிருத்திகா உதயநிதி: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரபல நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமாகிய உதயநிதி அவர்களின் மனைவி கிருத்திகா உதயநிதி.

இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் அடுத்தப் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இவர் 2013 ஆம் ஆண்டு ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

இயக்குநராக அறிமுகமான திமுக இளைஞரணிச் செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தனது மூன்றாவது திரைப்படத்தின் அதிகார பூர்வமாக வெளியிட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.

இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் நடிகர் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

அவர் இயக்கும் திரைப்படத்திற்கு
ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம் நாதன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி அவர் இயக்கும் திரைப்படத்தை RISE EAST நிறுவனம் தயாரிக்கிறது.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.