தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த திரையுலகினர்.
சென்னை 06 ஜூலை 2021
தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த திரையுலகினர்.
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஒளிபரப்பு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், தயாரிப்பாளர் திரு. ராமசாமி முரளி ராமநாராயணன் அவர்கள் நடிகர் கார்த்தி, நடிகை மற்றும் இயக்குநர் ரோஹினி, தயாரிப்பாளர் 2D ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் உள்ளிட்டோர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை செயலக்த்தில் நேரில் சந்தித்தனர்.
திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது.
இதில் திருத்தப்பட்ட வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின்படி சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு திரைப்படம் திரைக்கு வந்தாலும் அதில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருந்தால் மத்திய அரசு பார்த்து சென்சாருக்கு மறு தணிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.
இந்த திருத்தப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசன், அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் குரல் எழுப்பி இருந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலக்த்தில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021க்கு எதிராக முறையிட்டனர்.
திரைத்துறையின் கருத்துச் சுதந்திரத்தை மட்டுமல்ல, அதை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, மாநில அரசு இதில் தலையிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து ஒட்டு மொத்த திரையுலகின் சார்பாக கோரிக்கை மனுவை அளித்தானர்.












