கிரிக்கெட் தலையும் சினிமா தளபதியும் – சந்திப்பை பொறுக்க முடியாமல் அஜித்குமாரின் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங் என்ன தெரியுமா?
சென்னை 12 ஆகஸ்ட் 2021
கிரிக்கெட் தலையும் சினிமா தளபதியும் – சந்திப்பை பொறுக்க முடியாமல் அஜித்குமாரின் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங் என்ன தெரியுமா.?
கிரிக்கெட் உலகில் தல என்றழைப்படும் தோனியும் சினிமாவில் தளபதி என்றழைக்கப்படும் விஜய்யும் சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் இன்று சந்தித்துள்ளனர்.
‘பீஸ்ட்’ திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் விஜய்யும் CSK கிரிக்கெட் விளம்பரத்தில் தோனியும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இருவரும் ஒரே படப்பிடிப்புத் ஸ்டுடியோவில் இருவருக்கும் படப்பிடிப்பு நடந்ததால் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது இருவரும் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த செய்தியை நமது இனைத்தளத்தில் பார்த்தோம்.
இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் தல தளபதி மீட்டிங் என போட்டோக்களை போட்டு வைரலாக்கினர்.
வெகுநேரம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
தோனியை விஜய் ரசிகர்கள் தல என்று அழைப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அஜித் ரசுகர்கள்..
“ஒரே தல அஜித்குமார்” என ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
இத்துடன் தளபதி என்றால் அது ஸ்டாலின் தான் எனவும் போட்டோக்களை போட்டு வருகின்றனர்.












