நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு காலமானார் 

சென்னை 21 ஆகஸ்ட் 2021 நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு காலமானார் .

முன்னாள் தமிழ் சினிமா கதாநாயகியும், ஒரு குறிப்பிட்ட பிராண்ட் நல்லெண்ணய் விளம்பர படத்தில் பிரபலமானவருமான நடிகை நல்லெண்ணெய் சித்ரா சாலிக்கிராமம் காவேரி தெருவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார் .

நடிகை சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” இந்தப் படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார்.

2020 ஜனவரி 3’ம் தேதி “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” படம் வெளியானது .

அதுவே அவர் நடித்து வெளிவந்த கடைசி படமாகும்.

நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற ஒரே பெண். அவர் இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார்.

அப்பெண் குழந்தையை வளப்பதற்காகவே சித்ரா நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்து வந்தார் .

சித்ராவின் கணவர், சில மாதங்களுக்கு முன்., பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

கணவரை பராமரித்து வந்த நிலையில் இவர் காலமானது மிகுந்த வேதனைக்குரியது!

நேற்று (20-08-2021) , வெள்ளி இரவு 12′ மணிக்கு மாரடைப்பால் தன் சென்னை, சாலிகிராமம் வீட்டிலேயே காலமான சித்ராவுக்கு வயது 56.

இன்று மாலை 5′ மணிக்கு சித்ராவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது!

தினம் தன் வீட்டின் வெளிப்புறத்திலும், மொட்டை மாடியிலும ஏராளமான பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் தானிய உணவுகளையும் அளிக்கக்கூடிய பறவைகள் பாதுகாவலர் சித்ரா. ஏராளமான காக்கைகள் இவர் வீட்டின் மொட்டை மாடியில் நேரம் தவறாமல் வந்து, உணவுக்காக கரையும். இதற்காகவே வெளியூர் பயணத்தையும் படப்பிடிப்புகளையும் தவிர்த்து வந்தார் சித்ரா என்பது குறிப்பிடத்தக்கது !

error: Content is protected !!