என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன் நடிகர் கமல்ஹாசன்
சென்னை 30 அக்டோபர் 2021
என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன் நடிகர் கமல்ஹாசன்
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும், ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் @rajinikanth விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 29, 2021











