வீரமே வாகை சூடும் திரை விமர்சனம் ரேட்டிங் 3./5

நடிகர் நடிகைகள்  – விஷால், டிம்பிள் ஹயாத்தி, துளசி, மாரிமுத்து, யோகிபாபு, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா ரவி, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், Black sheep தீப்தி மற்றும் பலர்.

இயக்கம் – தூ.ப.சரவணன்.

ஒளிப்பதிவு – கவின் ராஜ்.

படத்தொகுப்பு – கே.பி. ஸ்ரீகாந்த்.

இசை – யுவன் சங்கர் ராஜா.

தயாரிப்பு – விஷால் பிலிம் பேக்டரி.

ரேட்டிங் – 3. /5

 

இந்த வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரைப் பார்த்த போது மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இத்திரைப்படம் இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு முழுமையான ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று திரைப்படத்தின் தலைப்பு வைத்ததில் இருந்து தெரிகிறது.

இந்தத் திரைப்படத்தை இரண்டே முக்கால் மணி நேரம் எதற்கு இப்படி இழுத்தார்கள் என தெரியவில்லை அந்த காரணத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் தான் கேட்க வேண்டும்.

கதாநாயகன் விஷால் காவல்துறையில் எஸ்ஐ பதவிக்கு தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இவருடைய தந்தை மாரிமுத்து போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.

கதாநாயகன் விஷாலின் தங்கை ரவீனா ரவி கல்லூரியில் படித்து வருகிறார்.

கதாநாயகன் விஷாலின் தங்கை ரவீணா ரவிக்கு அந்த ஏரியாவில் உள்ள பிரபல ரவுடியின் தம்பி ஒரு தலையாக காதலிக்கிறார்.

ஆனால், கதாநாயகன் விஷாலின் தங்கை ரவீனா ரவி அவருடைய காதலை ஏற்க மறுக்கிறார்.

அடிக்கடி காதல் தொந்தரவு தருகிறார்.

அதனால் ரோட்டில் அடிக்கடி சண்டையும் வருகிறது.

இதனால் கோபமடையும் ரவுடியின் தம்பி கதாநாயகன் விஷாலின் தங்கை ரவீனா ரவியை மிரட்டி காதலை சொல்ல வைக்கிறார்.

இந்த விஷயம் கதாநாயகன் விஷாலுக்கும், ரவுடிக்கும் தெரிந்து ரவுடியின் தம்பியை அசிங்க படுத்துகிறார்கள்.

இதனால், ரவீனா ரவியை கடத்த முயற்சி செய்கிறார்.

ஆனால், எதிர்பாராத விதமாக வேறொரு கும்பல் ரவீனா ரவியை கடத்தி விடுகிறார்கள்.

இறுதியில் தங்கை ரவீனா ரவி யை கதாநாயகன் விஷால் கண்டு பிடித்தாரா? இல்லையா? ரவீனா ரவியை கடத்திய கும்பல் யார்? எதற்காக கடத்தினார்கள்?

இந்நிலையில் கதாநாயகன் விஷாலின் தங்கை ரவீணா ரவி கொலை செய்து விடுகிறார்கள்.

தனது தங்கை ரவீணா ரவியின் கொலையில் வேறு ஏதோ விவகாரம் இருக்கிறது என சந்தேகப்படும் கதாநாயகன் விஷால்.

காவல்துறை அதிகாரியாக ஆவதற்கு முன் எதற்காக தனது தங்கையை கடத்தினார்கள் கடத்தியவர்களை கண்டு பிடிக்காமல்  விட மாட்டேன் என சபதம் எடுக்கிறார் கதாநாயகன் விஷால்.

தனது தங்கை ரவீனா ரவியை கடத்தியது யார்? கடத்தியவர்களை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த வீரமே வாகை சூடும் திரைப் படத்தின் மீதி கதை.

கதாநாயகனாக நடித்து இருக்கும் விஷால் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார்.

தங்கை பாசம், சமுதாயத்தின் மீது அக்கறை, சாமானிய மனிதனின் கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

கதாநாயகன் விஷாலின் ஆக்ஷன் காட்சிகளில் ஸ்டன்ட் மாஸ்டர்கள் தனி கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்க வேண்டும் என இயக்குனர் கூறியிருப்பார் போலிருக்கிறது.

போரஸ் கதாபாத்திரத்தில் அப்படியே பிட் ஆகிறார் கதாநாயகன் விஷால்.

இந்த மாதிரி கதாபாத்திரம் எல்லாம் கதாநாயகன் விஷலுக்கு சர்வ சாதாரணம். வழக்கம் போல் வெளுத்து வங்கியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகன் விஷால் காதலியாக டிம்பிள் ஹயத்தி.

கிடைத்த ஒரு சில காட்சிகளில் மிரள வைக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் டிம்பிள் ஹயாதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

கதாநாயகன் விஷாலின் தங்கையாக வரும் ரவீனா ரவி நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகன் விஷாலின் தங்கையாக ரவீணா ரவி.

நமது குடும்பத்தில் ஒருவராக, நமது பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் போல தெரிகிறார்.

ஒரு தலையாக காதலிக்கும் ஏரியா ரவுடியின் தம்பியிடம் சிக்கத் தவிக்கும் போது பரிதாப்பட வைக்கிறார் ரவீனா ரவி.

வில்லன்களிடம் தெரியாமல் சிக்கி, பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்துவிட்ட போது, அவர் மீதான பரிதாபம் திரைப்படம் பார்க்கும் நமக்கு இன்னும் அதிகமாகிறது.

கதாநாயகன் விஷாலின் நண்பனாக யோகிபாபு. தேவைப்படும் காட்சிகளில் அவரை வர வைத்து திரைப்படம் முழுவதும் இருப்பது போல் செய்திருக்கிறார்கள்.

காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் யோகி பாபு.

மற்ற படி தோழனுக்கு தோள் கொடுப்பவராக வருகிறார் யோகி பாபு.

கதாநாயகன் விஷாலின் தந்தையாக மாரிமுத்து, அம்தாயாக துளசி நடுத்தரக் குடும்பத்து பெற்றோர்களை கண்முன் நிறுத்துகிறார்கள்.

விஷாலின் தந்தையாக வரும் மாரிமுத்து மிக அருமையாக நடித்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்திற்கு பாபு ராஜ் மிக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

வில்லனாக பாபுராஜ். ஒரு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் திரைப்படத்தில் தனி வில்லனாக மிரட்ட முயற்சித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கவின் ராஜின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒகே தான் பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

சாமானிய மனிதனின் கோபத்தை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் து.ப.சரவணன்.

வெவ்வேறு திசையில் செல்லும் மூன்று விதமான கதைகளை ஒன்றாக அமைத்து திரைக் கதை உருவாக்கி இருக்கிறார்.

வழக்கமான கமர்ஷியல் திரைப்படத்திற்கு உண்டான அம்சங்களை வைத்தே திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் திரைப்படத்தில் ஒரு 45 நிமிடம் நிளத்தை குறைத்திருந்தால் வீரமே கண்டிப்பாக வாகை சூடியிருக்கும்.

வீரமே வாகை சூடும் திரைப்படம் – வாகை சுடவில்லை.

error: Content is protected !!