சாயம் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.25 /5

நடிகர் நடிகைகள்  – அபி சரவணன், ஷைனி, பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பலர்.

இயக்கம் – ஆண்டனி சாமி.

ஒளிப்பதிவு – கிறிஸ்டோபர், சலீம்.

படத்தொகுப்பு –முத்து முனியசாமி.

இசை – நாகா உதயன்.

தயாரிப்பு – ஒயிட் லேம்ப் புரொடக்சன்.

ரேட்டிங் – 2.25 /5

கொஞ்ச காலமாகவே தமிழ் திரைப்பட உலகில் சாதிப்பிரச்சினைகள் முக்கியத்துவம் கொடுத்து திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த மாதம் வெளிவந்த கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படமும் ஜாதி பிரச்சினையை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.

இந்த சாயம் திரைப்படமும் தென் மாவட்டப் பகுதியில் நடக்கும் சாதிப் பிரச்சினைகள் குறித்துப் எடுக்கப்பட்ட திரைப்படம்.

தென் மாவட்டங்களில் உள்ள சிவகங்கையில் பெரிய மனிதராக வாழ்ந்து வரும் பொன்வண்ணன் ,

இவருடைய நண்பர் ஆசிரியராக பணியாற்றி வரும் இளவரசு வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இவர்கள் இணைந்து செயல்பட்டு, அந்த ஊருக்கு நல்லது செய்து வருகிறார்கள்.

இவர்களது இருவருடைய மகன்களும் சிறுவயதிலிருந்து நண்பர்களாக இருக்கிறார்கள்.

சாதி வேறுபாடில்லாமல் நண்பர்களுடன் சகஜமாக பழகி வருகிறார்.

இவர்களை இருவரையும் போலவே இவர்களது மகன்கள் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்து வருகின்றனர்.

இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்குள்ளும் ஜாதி வெறியை ஏற்படுத்தி இவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி விடுகின்றனர்.

இருவருக்கும் ஏற்படும் மோதலில் ஒருவர் கொல்லப்படுகிறான்.

ஒரு சாதாரண பிரச்சனையை ஜாதி வெறியர்கள் எப்படி அதனை ஜாதிப் பிரச்சனையாக மாற்றுகிறார்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் அதன் பிறகு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதுதான் இந்த சாயம் திரைப் படத்தின் மீதி கதை

இந்த சாயம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள அபி சரவணன் ஆரம்பத்தில் சாதுவானவராகவும் பிறகு தாதாவாகவும் நடிப்பு ஓகே.

திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்வண்ணன் இளவரசன் என இருவரும் தங்களது தனித்தனியான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜாதியை வைத்து இழிவுபடுத்தும் அவர்களுக்கு தன்னுடைய வார்த்தையால் பதிலடி கொடுக்கும் காட்சியில் அசத்தியுள்ளார் இளவரசன்.

கதாநாயகன் அபி சரவணனின் முறைப் பெண்ணாக கதாநாயகி ஷைனி.

கதாநாயகன் அபி சரவணனை விழுந்து விழுந்து காதலிக்கிறார்.

கிராமத்துப் பெண் போல இருக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகி ஷைனியைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் போலிருக்கிறது.

வழக்கமான கதாநாயகிகள் போல இல்லாமல் இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஷைனியின் நடிப்பு படத்திற்கு பெரியதாக எடுபடவில்லை.

கதாநாயகன் அபி சரவணன் தாயாக சீதா போஸ் வெங்கட் என குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கு யதார்த்தமான சீனியர் நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

அனைத்து கதாபாத்திரங்களும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்கள்.

நாக உதயனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.

பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சலீம் – கிரிஸ்டோபர் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

கிராமத்தில் இருக்கும் சாதி ஒற்றுமையைப் பற்றியும் படத்தில் காட்டினாலும் வழக்கம் போல ஒரு சாதியைக் குறை சொல்லியும், வேறொரு சாதியை குற்றம் சொல்லியும் எடுக்கப்படும் திரைப்படங்களின் வரிசையில்தான் இந்தப் திரைப்படமும் உள்ளது.

இநத திரைப்படத்தை இயக்கியதோடு சாதி வெறி பிடித்த வில்லனாகவும் நடித்திருக்கிறார் இந்த திரைப்படத்தின் இயக்குனர் அந்தோணி சாமி.

மொத்தத்தில் ‘சாயம்’ திரைப்படம் சாயத்தை ரசிக்க முடியவில்லை.

error: Content is protected !!