யானை திரை விமர்சனம் ரேட்டிங் 3/5

நடிகர் நடிகைகள் :- அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ், யோகி பாபு, ராஜேஷ், ராமச்சத்ர ராஜு, ஆடுகளம் ஜெயபாலன், தலைவாசல் விஜய், புகழ, மற்றும் பலர்.

இயக்கம் :- ஹரி.

ஒளிப்பதிவு :- கோபிநாத்.

படத்தொகுப்பு :- ஆண்டனி.

இசை :- ஜி.வி பிரகாஷ் குமார்.

தயாரிப்பு :- டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்.

ரேட்டிங் :- 3 / 5.

 

தமிழ் திரைப்பட உலகில் கடந்த 20 ஆண்டு காலமாக கமர்ஷியல் திரைப்படங்களையே மட்டுமே இயக்கி வரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி.

திருநெல்வேலி, தூத்துக்குடி சுற்றுவட்டாரங்கள் பற்றிய திரைப்படங்களின் கதைக் களமாக இருக்கும் ஆனால் இந்த யானை திரைப்படத்தில் ராமேஸ்வரத்தை கதைக் களமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி.

மற்றபடி அரைத்த மாவை தான் அரைக்கிறார் அதே குடும்பம், ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என திரைப்படம் நகர்கிறது.

ராமேஸ்வரத்தில் பிவிஆர் குடும்பம் என பல தொழில்களைச் செய்யும் பெரிய குடும்பம் ராஜேஷ் குடும்பம் மறைந்த முதல் மனைவி மகன்கள் சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ், இரண்டாவது மனைவி ராதிகாவின் மகன் கதாநாயகன் அருண் விஜய்.

பி.ஆர்.வி குடும்பத்தின் இளைய மகன் அதிரடியாகவும் செல்வாக்காகவும் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் அருண் விஜய்.

அதிரடியான இளைஞராக இருப்பதால் பிவிஆர் குடும்பத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லாது பார்த்துக் கொள்கிறார் கதாநாயகன் அருண் விஜய்

பிவிஆர் குடும்பத்திற்கும், சமுத்திரம் என்பவரின் குடும்பத்திற்கும் நீண்ட நாள் பகை இருந்து வருகிறது.

சமுத்திரம் மகன் ராமசந்திர ராஜு, கதாநாயகன் அருண் விஜய் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்.

சமுத்திரக்கனியின் மகள் அம்மு அபிராமி, முஸ்லிம் இளைஞர் ஒருவரைக் காதலித்து வருகிறார் அவர் காதலித்து இளைஞனுடன் ஓடி விடுகிறார்.

அம்மு அபிராமியின் காதல் பற்றி தெரிந்தும் அதை தன்னிடம் மறைத்ததற்காக கதாநாயகன் அருண் விஜய்யை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் சமுத்திரக்கனி.

தாய் ராதிகாவும் கதாநாயகன் அருண் விஜய் கூடவே சென்று விடுகிறார்.

அம்மு அபிராமி எங்கே சென்றார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

சமுத்திரக்கனி ஜாதி வெறியால் அம்மு அபிராமியை கொல்ல நினைக்கிறார்.

அம்மு அபிராமியை கதாநாயகன் அருண் விஜய்
அவரைக் காப்பாற்ற நினைக்கிறார்.

சமுத்திரம் மகன் ராமசந்திர ராஜு, கதாநாயகன் அருண் விஜய் குடும்பத்தை பழி தீர்த்தரா? தீர்க்கவில்லையா?

அம்மு அபிராமியை கண்டு பிடித்தாரா?  கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் யானை திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த யானை திரைப்படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் எடுத்திருக்கிறார்.

கதாநாயகன் அருண் விஜய் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அம்மா பாசம், சகோதரர்கள் பாசம், அண்ணன் மகள் பாசம், காதல் என அனைத்தையும் தாங்கி சுமந்து இருக்கிறார் கதாநாயகன் அருண் விஜய்.

கதாநாயகன் அருள் விஜய் ஆக்‌ஷன் காட்சிகளில் அமகளப் படுத்தி இருக்கிறார்.

இந்த யானை திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தனக்கே உரிய பாணியில் அசத்தி இருக்கிறார் சமுத்திரகனி.

அதுபோல் ராதிகா சரத்குமார் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

கேஜிஎப் வில்லன் ராமச்சந்திர ராஜு இரண்டு வேடங்களில் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார்.

ராஜேஷ், ஆடுகளம் ஜெயபாலன், போஸ் வெங்கட், சஞ்சீவ், அம்மு அபிராமி, ஐஸ்வர்யா ஆகியோர் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒரு சில இடங்களில் சிரிக்கவும், ஒரு இடத்தில் அனுதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார் யோகி பாபு.

யோகி பாபு படம் முழுவதும் வருகிறார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையில், ‘சண்டாளியே…’ பாடல் ரசிக்க வைக்கிறது.

ஆனால், பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

குறிப்பாக சண்டை காட்சிகளுக்கு வரும் பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.

ராமேஸ்வரம் சுற்று வட்டாரங்களை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.கோபிநாத்.

ஒளிப்பதிவாளர் எஸ்.கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

படத்தொகுப்பாளர்
ஆண்டனியின் படத்தொகுப்பு திரைப்படத்தை விறு விறுப்பாக நகர்த்தியிருக்கிறது.

தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி.

கமர்ஷியல் திரைப்படங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் ஹரி.

மொத்தத்தில் யானை திரைப்படம் பலம்?

error: Content is protected !!