ஃபாரின் சரக்கு திரை விமர்சனம் ரேட்டிங் :- 1.75 / 5.

நடிகர் நடிகைகள் :- கோபிநாத் ஆறுமுகம், சுந்தர் குமரேசன், முகம்மது ஷாசன, சுரேந்தர் சுந்தரமூர்த்தி, அப்ரினா, இலக்கியா, ஹரிணி, உசேன், மற்றும் பலர்.

இயக்கம் :- விக்னேஸ்வரன் கருப்புசாமி,

ஒளிப்பதிவு :- சிவாநாத் ராஜன் எஸ்.

படத்தொகுப்பு :- பிரகாஷ் ராஜ் பி.

இசை :- பிரவீன் ராஜ்.

தயாரிப்பு :- நெப்டியூன் சைலர்ஸ்.

ரேட்டிங் :- 1.75 / 5.

ஃபாரின் சரக்கு’ என்ற இந்த திரைப்படத்தின் தலைப்பை பார்த்ததும் நல்ல சரக்குள்ள திரைப்படம் என்றுதான் நினைக்கத் வைக்கத் தோன்றியது சரியா ? நமது உள்ளூர் சரக்கு அடிப்பவர்கள் கூட ஃபாரின் சரக்கு என்றால் நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்.

அந்த ஃபாரின் சரக்கை எப்படி கடத்துகிறார்கள் என்ற கதை போலிருக்கிறது என்றுதான் தலைப்பை பார்த்ததும் நினைக்க தோன்றுகிறது.

திரைப்படத்தில் மருந்துக்கு கூட சரக்கு கண்ணுல காட்டவே இல்லை.

ஃபாரின் சரக்கு ‘ என்று சொல்வது கற்பழிப்பு வழக்கில் தேடப்படும் மிக கொடூரமான குற்றவாளியான குஜராத் மாநில அமைச்சர் ஒருவரின் மகனை மாநிலம் விட்டு மாநிலம் கடத்தி பாதுகாப்பாக வைக்கவே… அந்த குற்றவாளியின் குறியீட்டு உள்ள கோட் வேர்ட் தான் ‘ஃபாரின் சரக்கு’.

குஜராத் மாநில அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக ஃபாரின் சரக்கு எனற பெயரில் தமிழகத்துக்கு
வருகிறார்.

அவரை தமிழக அமைச்சர் ஒருவரின் பொறுப்பில் பத்து நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்பாடு நடக்கிறது.

இதன் பொறுப்பை மகாலிங்கம் என்ற நபரின் தலைமையிலான ஒரு ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது.

மறுபுரம் அந்த அமைச்சரின் மகனை தேடி கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள்.

அந்த குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்திற்கு வருகிறார்? அவர் எதற்காக ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? அந்த ரவுடி கும்பலிடம் அவர் சிக்கிகொண்டாரா? இல்லையா? என்பதுதான் இந்த ஃபாரின் சரக்கு ‘
திரைப்படத்தின் மீதி கதை.

இந்த ஃபாரின் சரக்கு
திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவருமே அறிமுகம் என்பதால் சற்று கதாபாத்திரங்களை நினைவு கூறுவது மிகவும் கடினமாகவுள்ளது.

திரைப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் திரைப்படம் என்றாலும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி அவர்களின் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வில்லனாக நடித்திருக்கும் மகாலிங்கம் வில்லனுக்கு உரிய பாணியில் நடிக்க முயற்சித்துள்ளார்.

திரைப்படத்தில் நடித்த அனைவரும் புதுமுகம் என்பதால் கதாப்பாத்திரங்களை நினைவில் வைத்திருப்பது பார்வையாளர்களுக்கு சற்று கடினமாக உள்ளது.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் அவர்களின் இயல்பான நடிப்பையும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று சில இடங்களில் தோன்றவைக்கிறது.

’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பு வைத்திருந்தாலும் திரைப்படத்தில் மது அருந்துவது போலவும் அல்லது புகை பிடிப்பது போலவும் காட்சிகளை தவிர்த்திருப்பது பாராட்ட கூடிய விஷயம அதற்கு
இயக்குனர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமிக்கு பாராட்டுகள்.

இந்த ஃபாரின் சரக்கு திரைப்படத்திற்கு மிகவும் மட்டமான ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு ஏற்றவாறு இல்லை.

ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜன் அவருடைய பணியை சிறப்பாக செய்யவில்லை.

பிரவீன் ராஜின் இசை படத்தின் நீரோட்டத்தில் பயணிக்க வைத்திருக்கிறது.

ஆக்‌ஷன் காட்சிகளில் வரும் பிண்ணனி இசை சற்று கவனிக்கும் படி அமைத்திருக்கிறார்.

மொத்தத்தில் ’ஃபாரின் சரக்கு’ திரைப்படம் மிகவும் மட்டமாக இருக்கிறது.

error: Content is protected !!