போத்தனூர் தபால் நிலையம் திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.75 / 5
நடிகர் நடிகைகள் :- பிரவீன், அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ், சம்பத்குமார், சீத்தாராமன், தீனா அங்கமுத்து, மற்றும் பலர்.
இயக்கம் :- பிரவீன்.
ஒளிப்பதிவு :- சுகுமாரன் சுந்தர்.
படத்தொகுப்பு :- பிரவீன்.
இசை :- தென்மா – ஏலன் செபாஸ்டின்.
தயாரிப்பு :- பேஷன் ஸ்டுடியோஸ், பைசைக்கிள் சினிமாஸ்.
ரேட்டிங் :- 2.75 / 5.
இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் சார்ந்த திரைப்படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப் படத்தில் தொழில்நுட்ப இயக்குநராக பணிபுரிந்தவர் இந்த போத்தனூர் தபால் நிலையம் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் பிரவீன்.
போத்தனூர் தபால் நிலையம் இன்று மே 27, 2022 முதல் ஆஹா தமிழ் ஒடிடியில் செயலியில் திரையிடப்படுகிறது
கேரளாவுக்குச் செல்லும் சில ரயில்கள் கோயம்புத்தூர் செல்லாமல் போத்தனூர் வழியாகச் சென்றுவிடும்.
கோவை, கேரளா மக்களுக்கு போத்தனூர் நன்றாகத் தெரிந்த ஒரு ஊர்.
போத்தனூர் தபால் நிலையத்தில் 1990களில் நடக்கும் ஒரு பணத் திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிரவீண்.
கதாநாயகன் பிரவீணின் தந்தை போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர் ஆக வேலை செய்கிறார்.
வெள்ளிக்கிழமையில் தபால் நிலையத்தில் வைப்பு தொகை ஆக வந்த பணம், ஏற்கெனவே இருக்கும் இரண்டு லட்சம் பணம் என ஆறு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தாமல் கேஷியர் விட்டு விடுகிறார்.
இரண்டு நாட்கள் விடுமுறை தினம் என்பதால் போத்தனூர் தபால் நிலையத்தில் அந்த வைப்பு தொகையை வைத்து இருந்தால் பாதுகாப்பில்லை எனக் கருதும் போஸ்ட் மாஸ்டர் அந்த வைப்பு தொகையை தனது வீட்டிற்குக் எடுத்து செல்கிறார்.
எடுத்து செல்லும் வழியில் அந்த வைப்பு தொகையை திருடி விடுகிறார்கள்.
திங்கள் கிழமை காலைக்குள் ஏழு மணிக்குள் அந்த வைப்பு தொகையை போத்தனூர் தபால் நிலையத்தில் வைக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் போஸ்ட் மாஸ்டரின் மகனான கதாநாயகன் பிரவீண் தனது காதலி அஞ்சலி ராவ் நண்பன் வெங்கட் சுந்தர் ஆகியோர் உடன் சேர்ந்து திருடப்பட்ட வைப்பு தொகையை கண்டுபிடிக்க முயற்சி மேல் கொள்கிறார்கள்
அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? போத்தனூர் தபால் நிலையத்தில் காணாமல் போன வைப்பு தொகையை திருடிய நபர் யார்? திருடிய நபரை கண்டு பிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் இநத போத்தனூர் தபால் நிலையம் திரைப்படத்தின் மீதி கதை.
திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் பிரவீண்.
அவருடைய நடிப்பில் புதுமுகம் நடிகர் என்று சொல்ல முடியாத அளவிற்கு யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
நடிப்பதற்கு முக்கியமான விஷயம் வசன உச்சரிப்பு என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் பேசும் சில வசனங்களைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது.
ஆனால், அவருடைய வார்த்தை உச்சரிப்பில்தான் அழுத்தம் திருத்தமாக இல்லை என்பது ஏமாற்றம்.
கதாநாயகன் பிரவீண் காதலியாக வரும் கதாநாயகி அஞ்சலி ராவ் ஒரு யதார்த்தமான நடிப்பு.
கதாநாயகி அஞ்சலி ராவின் யதார்த்தமான தோற்றம்.
தனது காதலனுடன் கதாநாயகன் பிரவீணுடன் எப்போதும் கூடவே இருக்கும் ஒரு கதாபாத்திரம் .அஞ்சலி ராவ்.
கதாநாயகன் பிரவீண் நண்பனாக வரும் வெங்கட் சுந்தர் இயல்பான நடிப்பு அருமை.
வெங்கட் சுந்தர் கதாபாத்திரத்திற்கு இன்னும் நிறைய நகைச்சுவையை காட்சிகள் சேர்க்க வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் விட்டிருக்கிறார்கள் இயக்குனர் பிரவீன்.
கதாநாயகன் பிரவீண் தந்தையாக நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ் அருமையாக நடித்திருக்கிறார்.
வைப்பு தொகை காணாமல் போனதும் அவர் படும் அவஸ்தையை மிக அருமையாக நடிப்பில் காண்பித்திருக்கிறார்.
தபால் நிலையத்தின் கேஷியர் சீதாராமன், மற்ற பணியாளர்கள், பிரவீண் தாய், தங்கை என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் தேர்வு மிகவும் சரியாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், 1990 காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை கண்முன் நிறுத்திவிட்டார்.
இசையமைப்பாளர்தென்மா, ஏலன் செபாஸ்டின் இருவருடைய இசை மற்றும் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு பலம்
கலை இயக்குனர் ஆகியோரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
1990 காலகட்டத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் பொருட்கள் அனைவரும் அருமையாக இருக்கிறது.
1990 கால கட்டத்தின் போஸ்ட் ஆபிஸை அதன் தன்மை மாறாமல் கொண்டு வந்திருக்கிறார்கள்.
போஸ்டர்ஸ், கேசட்ஸ் என திரைப்படம் நம்மை அந்தக் காலகட்டத்திற்கு இழுத்துச் சென்று விடுக்கிறது.
திரைப்படத்தின் மேக்கிங்கில் நல்ல மெனக்கெடல் இருப்பது இந்த திரைப்படத்தின் பெரிய பலம்.
திரைப்படத்தின் கதைக்களம் திரைப்படமாக்கப்பட்ட விதம், அந்த 1990களின் நடக்கும் காலகட்டம் என்பதால் அதிகம் பரிச்சயமில்லாத நடிகர்கள் நடிகைகள் இவை அனைத்தும் தான் இந்தப் திரைப்படத்தின் பிளஸ் பாயின்ட்.
மொத்தத்தில் போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம் பழைய மெமரி என்பதால் ஓடிடியில் பார்க்கலாம்.