ஓடிடியில் விரைவில் வெளியாகும் நடிகர் அசோக் செல்வனின் வேழம் திரைப்படம்.
சென்னை 25 ஆகஸ்ட் 2022 ஓடிடியில் விரைவில் வெளியாகும் நடிகர் அசோக் செல்வனின் வேழம் திரைப்படம்.
நடிகர் அசோக் செல்வனின் ‘வேழம்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட உலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார் நடிகர் அசோக் செல்வன்.
அவர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வேழம்’.
இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இயக்குனர் சந்தீப் ஷ்யாம் என்பவர் இந்த வேழம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் ராஜ கிருஷ்ணமூர்த்தி, சங்கிலி முருகன், பி.எல் தேனப்பன், மராத்தி நடிகர் மோகன் அகாஷே உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
ஆக்ஷன் த்ரில்லர் உருவான இந்தத் திரைப்படத்தை கே4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் என்பவர் தயாரித்துள்ளார்.
ஜானு சந்தர் இநத வேழம் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியானது.
நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் விரைவில் அமேசான் ஓடிடித்தளத்தில் வெளியாகவுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.











