நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் பென்சில் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் இன்று காலமானார்.

சென்னை 25 ஆகஸ்ட் 2022 நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் பென்சில் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் இன்று திடீரென காலமானார்.

இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் பென்சில் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் கடந்த 2016-ஆம் வருடம் வெளியான திரைப்படம் பென்சில்.

இந்த பென்சில் திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்திருந்த இந்த திரைப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் பள்ளி மாணவராக நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் மணி நாகராஜ் இயக்கியிருந்தார்.

இந்த பென்சில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணி நாகராஜ் அடுத்ததாக வாசுவின் கர்பிணிகள் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

நீயா நானா கோபிநாத், அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுதார், சீதா போன்ற பிரபலங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆவதாக கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் இயக்குநர் மணி நாகராஜ் திடீரென இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பான வாசுவின் கர்பிணிகள் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அன்புடையீர்,

வாசுவின் கர்ப்பிணிகள் குழு, கனத்த இதயத்துடன் எங்கள் இயக்குனர் திரு. மணி நாகராஜ் அவர்கள் இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மதுரையை சேர்ந்த 45 வயதான இயக்குனர் மணிராஜ், திரைக்கல்லூரியில் படித்துள்ளார்.

பென்சில் திரைப்படத்தினை இயக்கிய அவர், இதற்கு முன்பாக இயக்குனர் கௌதம் வாசு தேவ் மேனனுடன் ‘காக்க காக்க ‘ முதல் ‘ விண்ணைத்தாண்டி வருவாயா ‘ வரை உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவரது மரணம் தமிழ் திரைப்பட உலகில் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு எங்களது பிரார்த்தனைகள். தங்களின் இழப்பால் வாடும்! இறுதி சடங்கானது நாளை AVM இடுகாட்டில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!