இயக்குனர் பாரதிராஜாவின் மருத்துவ செலவிற்கு கைவிரித்த சொந்த உறவுகள் மொத்த மருத்துவ செலவையும் ஏற்றுக்கொண்ட முக்கிய அரசியல் பிரமுகர்!!!

சென்னை 06 செப்டம்பர் 2022 இயக்குனர் பாரதிராஜாவின் மருத்துவ செலவிற்கு கைவிரித்த சொந்த உறவுகள் மொத்த மருத்துவ செலவையும் ஏற்றுக்கொண்ட முக்கிய அரசியல் பிரமுகர்!!!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மொத்த மருத்துவச் செலவை ஏற்க குடும்பத்தினர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மொத்த மருத்துவச் செலவையும் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மூன்று நாட்கள் திவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டிருந்த அறிக்கையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

எனவே என்னை நேரில் காண வர வேண்டாம்.

பூரண நலம் பெற்று அனைவரையும் சந்திக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இயக்குனர் பாரதிராஜாவிற்க்கு தொடர்ந்து ஐசியூவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

மருத்துவமனையில் இயக்குனர் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் ஆகிவிட்டது.

இதனால் அவருக்கு மருத்துவச் செலவு அதிகரித்து வருகின்றன.

இதனால், அவருக்கு மருத்துவச் செலவுக்கு பணம் கொடுக்க அவரது குடும்பத்தில் யாரும் முன் வரவில்லையாம்.

இதனை தெரிந்து கொண்ட புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தற்போது இயக்குனர் பாரதிராஜாவின் மொத்த மருத்துவச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இன்னும் சில நாட்களில் இயக்குனர் பாரதிராஜா வீடு திரும்பி விடுவார் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் திரைப்படங்களில் உடனடியாக நடிக்க அவருக்கு உடல்நிலை அனுமதிக்காது என்றும் 50 நாட்களாவது அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம்
தெரிவித்துள்ளது.

error: Content is protected !!