இயக்குனர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை 23 மே 2022 இயக்குனர் டி.ராஜேந்தர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் டிராஜேந்தர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி தமிழ் திரைப்பட உலகை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், ஒளிப்பதிவு, தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் டி.ராஜேந்தர்.
காதல், தங்கை சென்டிமென்ட், அம்மா சென்டிமேட் என அனைத்தும் அற்புதமாக இருக்கும்.
டி ராஜேந்தர் கடைசியாக வீராசாமி என்ற படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார்.
இதையடுத்து விஜய்சேதுபதி நடித்த கவண் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், டி ராஜேந்தர் தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவர், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ள போதிலும் மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிலம்பரசன் டிஆர் சிங்கப்பூரில் மேல்சிகிச்சைக்காக அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.