பழம்பெரும் பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சென்னை 07 ஜூன் 2021
பழம்பெரும் பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
1944ம் ஆண்டு வெளியான Jwar Bhata படத்தின் மூலம் அறிமுகமானவர் திலீப் குமார்.
இந்தியாவின் முத்த நடிகர் திலீப் குமார் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார்.
பிரபல பாலிவுட் பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் இரண்டு சகோதரர்கள் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உயிரிழந்தனர்.
பிரபல பாலிவுட் பழம் பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் (வயது 98). முதுமை காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திடீரென நேற்று காலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதா அவரது மனைவியும் நடிகையுமான சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திலீப் குமாருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்த இதே மருத்துவமனையில் பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப் பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.











