ட்ரிகர் திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.25 / 5.

நடிகர் நடிகைகள் :- அதர்வா முரளி, அருண் பாண்டியன், தன்யா ரவிசந்திரன், சீதா, சின்னி ஜெயந்த், அழகம் பெருமாள், முனீஸ்காந்த, ராகுல் தேவ் ஹெட்டி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சாம் ஆண்டன்.

ஒளிப்பதிவு :- கிருஷ்ணா வசந்த்.

படத்தொகுப்பு :- .ரூபன்.

இசை :- .ஜிப்ரான்.

தயாரிப்பு :- பிரமோத் பிலிம்ஸ், மிராக்கிள் மூவீஸ்.

ரேட்டிங் :- 2.25 / 5.

தமிழ் திரைப்பட உலகில் காவல் துறையில் உள்ள சில காவல்துறை அதிகாரிகள் செய்யும் குற்றங்களையும் சுட்டிக்காட்டும் திரைப்படங்களும் வருகின்றன,

அதே சமயம், காவல் துறையின் பெருமைகளைப் பற்றிக் காட்டும் காவல் துறை அதிகாரிகள் செய்யும் நேர்மையான விஷயங்களைப் பற்றியும் திரைப்படங்களும் நிறைய வருகின்றன.

அந்த விதத்தில் காவல்துறையின் பெருமையைப் பற்றிக் காட்டும் திரைப்படம் இந்த ‘ட்ரிகர்’.

ஒரு அண்டர் கவர் ஆபரேஷனில் தன்னிச்சையாக செயல்பட்டதால் பணி நீக்கம் செய்யபடுகிறார் காவல் துறையில் இருக்கும் கதாநாயகன் அதர்வா.

அதன் பின் அவரை ‘கமிஷனர் உள் விவகாரங்கள்’ பற்றி ரகசியமாக விசாரிக்கும் ‘இன்டர்னல் அபேர்ஸ்’ குழுவிற்கு கதாநாயகன் அதர்வா சேருகிறார்.

தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றி இன்டர்னல் அபேர்ஸ் கண்டு பிடிப்பதுதான் அந்தத் துறையின் வேலை.

அந்தப் பணியில் இருக்கும் போது ஒரு குழந்தைக் கடத்தலைப் பற்றி விசாரிக்கச் செல்கிறார் கதாநாயகன் அதர்வா

அது தொடர்ச்சியாக வேறு பல தொடர்புகளுடன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார் கதாநாயகன் அதர்வா.

அந்தக் கும்பலைப் பற்றிய விசாரணையில் இறங்குகிறார் கதாநாயகன் அதர்வா.

அந்தக் கும்பலை யார், அதற்குத் தலைமை வகிப்பது யார் என்பதைக் கண்டுபிடித்தாரா? பிடிக்க வில்லையா? என்பதுதான் இந்த டிரிகர் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த ட்ரிககர் திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வா முரளி நடித்திருக்கிறார்.

காக்கிச் சட்டை அணியாத காவல் துறை அதிகாரி வேடம் கதாநாயகன் அதர்வா மிக அருமையாக இந்த கதாபாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார்.

இளம் வயது கதாநாயகனாக இருந்தாலும் ஆக்ஷன் கதாநாயகனாக பொருத்தமாகவே மாறி வருகிறார்.

நல்ல நல்ல கதைகளாகத் தேடிப் பிடித்து நடித்தால் அடுத்த கட்டத்திற்குப் பயணித்துக் கொண்டிருக்கிறாள் கதாநாயகன் அதர்வா.

இதற்கு திரைப்படத்தில் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அதர்வா ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் காதல் காட்சிகளோ டூயட் பாடல்களோ இல்லாத ஒரு காதல் ஜோடி.

அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் நிறைவாக வந்து போகிறார் தன்யா ரவிச்சந்திரன்.

அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அருண் பாண்டியன்.

கதாநாயகன் அதர்வாவின் தந்தையாக அருண் பாண்டியன் கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார்.

கதாநாயகன் அதர்வாவின் குழுவில் முனிஷ்காந்த், நிஷா இருந்தாலும் எந்த இடத்திலும் அவர் காமெடி என்ற பெயரில் நம்மை கஷ்டப்படுத்தவில்லை.

தன் மகன் தன்னைப் பற்றி பெருமையாக நினைக்க வேண்டும் என்று கடமையில் ஒரு தியாகத்தைச் செய்கிறார் சின்னி ஜெயந்த்.

குழந்தை கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார் சின்னி ஜெயந்த்.

கதாநாயகன் அதர்வாவின் தாயாக சீதா, வழக்கமான தாயாக பாசத்தைப் பொழிகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் ஷெட்டி. பார்ப்பதற்கு ஆசிஷ் வித்யார்த்தி சகோதரர் போல இருக்கிறார்.

இவருடைய உருட்டல், மிரட்டல் வில்லன் கதாப்பத்திரத்திற்கு எதுவும் பெரிதாக எடுபடவில்லை.

ஒரு த்ரில்லர் திரைப்படத்திற்குரிய பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம் ஜிப்ரான்.

ஜிப்ரான் இசை பாடல், பின்னணி இசையும் அனைத்தும் சுமார் ரகம்.

டைரக்டர் சாம் ஆன்டன் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார்.

ஆனால் தெளிவான திரைக்கதை இல்லாத்தது வருத்தமாக உள்ளது.

ஆனால், லாஜிக் மீறல்களை இந்த திரைப்படத்தில் அதிகமாக இருக்கிறது அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.

மொத்தத்தில் ட்ரிகர் திரைப்படம் டிக் அடிக்கவில்லை.

error: Content is protected !!