பானி பூரி வெப் சீரிஸ் விமர்சனம் ரேட்டிங் :- 3.5/5.
நடிகர் நடிகைகள் :- லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிஹா, வினோத் சாகர், ஸ்ரீகிருஷ்ண தயாள், கோபால் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பாலாஜி வேணுகோபால்.
ஒளிப்பதிவு :- பிரவீன் பாலு.
படத்தொகுப்பு :- பி.கே.
இசை :- நவநீத் சுந்தர்.
தயாரிப்பு நிறுவனம் :- ஃபுல் ஹவுஸ் என்டர்டைன்மெண்ட்.
தயாரிப்பாளர் :- ஃபுல் ஹவுஸ் என்டர்டைன்மெண்ட்
ரேட்டிங் :- 3.5/5.
இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் உலகில் பணியில் இருக்கும் ஆண் பெண் உறவுகளில் ஏற்படும் மாற்றத்தையும் சிக்கல்களையும் மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.
பானி பூரி இனையத்தொடர் இன்று shortflix ஒடிடி இனையத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த பாணி பூரி இனையத்தெடரை இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கி இருக்கிறார்.
சென்னையில் இருக்கும் ஒரு மென் பொருள் கம்பெனியில் ரோபோட்டிஸ் துறையில் விஞ்ஞானியாக கதாநாயகி சாம்பிகா பணிபுரிந்து வருகிறார்.
கோவையில் இருக்கும் கதாநாயகன் லிங்கா சென்னையில் இருக்கும் கதாநாயகி சாம்பிகா இருவரும் காதலர்கள் நான்கு வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட கதாநாயகி சாம்பிகாவின் நெருங்கிய தோழியின் திருமண வாழ்க்கை முறிந்து இருவரும் விவாகரத்து செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.
இந் நேரத்தில் தான் காதலிக்கும் கதாநாயகி சாம்பிகாவை திருமணம் செய்துக்கொண்டு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கதாநாயகன் லிங்கா.
திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கும் போது காதல் என்பது வேறு திருமணம் என்பது வேறு, திருமணதிற்கு முன்பு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு வீட்டில் இருவரும் ஏழு நாட்கள் தங்க முடிவு செய்து ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் இருவரும் தங்குகிறார்கள்.
இந்த பிரச்சனைக்கு திருமணம் செய்து கொள்ளாமல், கணவன் மனைவி போல் லிவிங் டூ கெதர் முறையில் இருவரும் ஏழு நாட்கள் ஒன்றாக வாழ வேண்டும் என தந்தை இளங்கோ குமரவேல் சொல்கிறார்.
இந்த ஏழு நாட்களில் உங்களுடைய அன்பும் அரவணைப்பும் உண்மையாக இருந்தால் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் இருவரும் பிரிந்து விடுங்கள் என சில நிபந்தனைகளுடன் கதாநாயகன் லிங்காவுக்கும் கதாநாயகி சாம்பிகாவுக்கும் தந்தை இளங்கோ குமரவேல் யோசனை கூறுகிறார் .
அதன்படி கதாநாயகன் லிங்காவுடன் சேர்ந்து லிவிங் டூ கெதர் முறையில் வாழ சம்மதிக்கும் கதாநாயகி சாம்பிகா ஐ டி கம்பெனியின் பொறுப்பில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்ட்டில் இருவரும் சேர்ந்து ஏழு நாட்கள் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்கிறார்.
முடிவில் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ஏழு நாட்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்களா? திருமணம் செய்து கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த பானிபூரி இனையத்தொடரின் மீதிக்கதை.
இந்த பானி பூரி இணையத் தொடரில் கதாநாயகியாக லிங்கா நடித்திருக்கிறார்
லிங்கா அனைத்துவித பரிணாமங்களில் மிக தேர்ந்த நடிகராக பாராட்டும்படியான நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார் .
கதாநாயகி சாம்பிகா கதைக்கேற்றபடி நடித்திருக்கிறார் .
கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து கதாநாயகி சாம்பிகா
சிறப்பாக நடித்திருக்கலாம் .
இன்றைய இளையதலைமுறைக்கு எற்ற தெளிவான தந்தையாக இளங்கோ குமரவேல், மிக அருமையாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் லிங்காவின் நண்பராக வரும் வினோத் சாகரின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
கனிகா , கோபால் , ஸ்ரீ கிருஷ்ணா தயாள் என நடித்த அனைவரது கதாபாத்திரங்களும் மிகவும் சிறப்பு.
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு இனையத்தொடருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.
கர்ணம் தப்பினால் மரணம் என்பது போல ஒரு
நூலிழை தப்பினாலும் ஆபாசமாகி விடும் கதையில் எந்த வித விரசமும் இல்லாமல் ஏத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
எந்த வித ஆபாச கலப்பில்லாமல்,,,, காதலிக்கும் காதலர்களுக்கு வாழ்க்கையில் இருவரின் புரிதல் அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தினை வலியுறுத்தி குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் படியாக இந்த இனையத்தொடர் எட்டு பாகங்களாக இயக்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
மொத்தத்தில் இந்த பானி பூரி இனையத்தொடர் மிகப்பெரிய சோலா பூரியாக குடும்பத்துடன் சாப்பிடலாம்.











