பிரின்ஸ் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3./5.

நடிகர் நடிகைகள் :- சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா ரியாபோஷாப்கா, சூரி, ஆனந்தராஜ், பிரேம்ஜி அமரன், பஞ்சு சுப்பு, கார்ல் ஏ ஹார்டே, ஹலோ கந்தசாமி, சதீஷ் கிருஷ்ணன், பரத், பிராங்க் ஸ்டார் ராகுல், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அனுதீப் கே வி.

ஒளிப்பதிவு :- மனோஜ் பரமஹம்சா.

படத்தொகுப்பு :- பிரவீன் கே எல்.

இசை :- தமன்.எஸ்.

தயாரிப்பு :- சுரேஷ் புரொடக்ஷன்ஸ் & ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்.

ரேட்டிங் :- 3. / 5.

 

 

தனது திரைப்படங்களின் காமெடி கலந்த மாதிரியான கதைகளைத் தேர்வு செய்து, அதை அனைத்து திரைப்பட ரசிகர்களுக்கும் ரசிக்கும் படியான திரைப்படமாகக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்த திரைப்படத்தில் கதை இல்லை என்றாலும் காமெடி இருக்கிறது என்று தேர்வு செய்து நடித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

பிரிட்டிஷ்காரர்களால் சுதந்திரப் போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட தனது தாத்தாவின் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பவர் கதாநாயகனின் தந்தை முற்போக்குவாதியான சத்யராஜ்.

தெரியாத அனைத்து விஷயங்களையும் தெரிந்தது போல் காட்டிக் கொள்பவர் சத்யராஜ்.

தனது மகள் சொந்தத்தில் திருமணம் செய்த காரணத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்ட சத்யராஜ்.

தனது மகன் சிவகார்த்திகேயனை சாதி, மதம் கடந்து காதல் செய்ய ஊக்குவிக்கிறார்.

பாண்டிச்சேரி அருகில் இருக்கும் தேவனக்கோட்டை பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக இருக்கிறார் கதாநாயகன் சிவகார்த்திகேயன் வேலை பார்த்து வருகிறார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் வேலை பார்க்கும் பள்ளியில் எதிர்பாராதவிதமாக கதாநாயகி மரியா ஆங்கில ஆசிரியையாக வந்து வேலைக்கு சேர்கிறார்.

ஆசிரியையாக வேலை சேரும் பிரிட்டிஷ் நாட்டு பெண்ணான கதாநாயகி மரியாவைக் காதலிக்கிறார் கதாநாயகன் சிவகார்த்திகேயன்.

தனது தாத்தாவைக் கொன்ற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பெண் கதாநாயகி மரியா தனது மகன் கதாநாயகன் சிவகார்த்திகேயன் காதலிப்பதை எதிர்க்கிறார் தந்தை சத்யராஜ்.

இந்தக் காதலுக்கு கதாநாயகி மரியாவின் தந்தையும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இருவரின் தந்தைகளின் எதிர்ப்பை மீறி கதாநாயகன் சிவகார்த்திகேயன் கதாநாயகி மரியா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த பிரின்ஸ் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் வழக்கம் போல் தனக்கான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்பாவித் தனமான முகபாவனைகள் காதலிப்பது, நடனமாடுவது என அமர்க்களம் செய்திருக்கிறார்.

இந்த பிரின்ஸ் திரைப்படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார்.

உக்ரைன் நாட்டை சேர்ந்த நடிகையான கதாநாயகி மரியா ரியபோஷப்கா தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.

தமிழ்நாட்டு பாணியில் அவர் குத்தாட்டம் போடும் விதம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

எதிரில் இருப்பவர்கள் தமிழில் பேசி நடிக்க அதைப் புரிந்தது போல காட்டிக் கொண்டு எக்ஸ்பிரஷன் கொடுப்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை.

சின்னச் சின்ன முகபவாங்களில் கூட தேர்ந்த நடிகை போல நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.

அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெற்றவர் தந்தை சத்யராஜ்.

கதாநாயகன் சிவகார்த்திகேயனின் தந்தையாக வரும் சத்யராஜ் நடிப்பில் வழக்கம் போல அவருடைய அனுபவ நடிப்பில் அசத்தியுள்ளார்.

தனக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்று கூறி கேலிக்குள்ளாக்கப்படும் போது அதற்கான ரியாக்‌ஷன்களை கொடுத்து அசாதாரணமாக நடித்துள்ளார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயனின்  நண்பர்கள் சதீஷ், ராகுல், பாரத் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகனுக்கு நண்பர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் சேர்த்துள்ளார்கள்.

யாரும் பெரிதாக சிரிக்க வைக்கவில்லை என்றாலும் சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.

பிரேம்ஜிதான் திரைப்படத்தின் வில்லன் போல நடித்திருக்கிறார்.

ஊரில் உள்ள இடங்களை ஏமாற்றி பிடுங்கும் ஒரு கதாபாத்திரம்.

ஒரே ஒரு காட்சியில் சூரி வந்து போகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிகர் சூரி இருக்க வேண்டும் என்பதால் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தமன்.எஸ்  இசையில், “ஜெஸிகா, பிம்பிலிக்கி பிலாப்பி” போன்ற பாடல்கள் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது.

இருந்தாலும் இசையில் சற்று தெலுங்கு சாயல் அடிக்கத்தான் செய்கிறது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

பிரவீன் கே எல் படத்தொகுப்பு அருமை.

ஆனாலும், சில பல காட்சிகளில் மட்டுமே கதையில் சிரிக்க வைக்கிறார் இயக்குனர் கே.வி.அனுதீப்.

அதற்கு தமிழ் வசனங்களை எழுதிய பிரபாகரன், ஆனந்த் நாராயணன் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘ப்ரின்ஸ்’  திரைப்படம் கொஞ்சம் கதை கொஞ்சம் காதல் கொஞ்சம் காமெடி.

error: Content is protected !!